பக்கம்:இசையமுது 1, 1984.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பகுதி தமிழர் முரசு உயர்வென்று கொட்டுக முரசே-நல்ல உண்மைத் தமிழர்கள் வாழ்வு! அயர்வில்லை அச்சமிங் கில்லை-புவி ஆளப் பிறந்தவன் தமிழன். உயர்வென்று கொட்டுக முரசே! அயல் என்று கொட்டுக முரசே!-உற வான திராவிடர் அல்லார்! துயர் செய்ய எண்ணிடும் பகைவர் - திறம் தூள் என்று கொட்டுக முரசே! உயர்வென்று கொட்டுக முரசே! அறிவுள்ள திராவிடர் நாட்டில்--சற்றும் ஆண்மை யில்லாதவர் வந்து நமர் பசிகொள்ள நம்சோற்றை-உண்ண நாக்கைக் குழைப்ப துணர்ந்தோம்! உயர்வென்று கொட்டுக முரசே! தமிழ்நாடு தமிழருக் கென்றே--இந்தச் சகத்தில் முழக்கிடு முரசே நமை வென்ற நாட்டினர் இல்லை இதை நாற்றிசை முற்றும் முழக்கு! உயர்வென்று கொட்டு முரசே! 87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/38&oldid=1443353" இலிருந்து மீள்விக்கப்பட்டது