பக்கம்:இசையமுது 1, 1984.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்கள் பகுதி தாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ சீரோடு பூத்திருந்த செந்தா மரைமீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச் செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியை அவ் இமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு! கன்னங் கறேலென்று காடுபட்ட மேகத்தில் மின்னி வெளிப்பட்ட விண்மீன்போல் உன்றன்விழி சின்ன இமையைத் திறந்ததேன் நீயுறங்கு; கன்னலின் சாறே கனிச்சாறே நீயுறங்கு! 55 குத்துண்ட கண்ணாடி கொண்டபல வீரர்கள்போல் துத்திக்காய் போலச் சுடர்முகத்தை நீ சுருக்கி ஏனமுதாய் என்றன் இசைப்பாட்டே கண்ணுறங்கு! வான் நழுவி வந்த வளர்பிறையே கண்ணுறங்கு! கன்னம்பூ ரித்துக் கனியுதடு மின்உதிர்த்துச் சின்னவிழி பூத்துச் சிரித்ததென்ன செல்வமே? அன்னைமுகம் வெண்ணிலவே ஆனாலும் உன்விழியைச் சின்னதொரு செவ்வல்லி ஆக்காமல் நீயுறங்கு! நெற்றிக்கு மேலேயுன் நீலவிழியைச் செலுத்திக் கற்றார்போல் என்ன கருதுகின்றாய்? நீ கேட்டால்* ஆனை அடிபோல் அதிரசத்தைச் சுட்டடுக்கித் தேனில் துவைத்தெடுத்து தின்என்று தாரேனா? கொட்டித் துப்பைப்பூக் குளித்ததுபோல் உன்னெதிரில் பிட்டுநறு நெய்யில் பிசைந்துவைக்க மாட்டேனா? குப்பை மணக்கக் குடித்தெருவெல் லாம்மணக்க அப்பம் நிலாப்போல் அடுக்கிவைக்க மாட்டேனா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/56&oldid=1443367" இலிருந்து மீள்விக்கப்பட்டது