பக்கம்:இசையமுது 1, 1984.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இசையமுது கொத்தும் மரங்கொத்தி தாளங் குறித்துவரத் தத்துபுனல் தாவிக் கரையில் முழாமுழக்க மின்னும் பசுமை விரிதழைப்பூம் பந்தலிலே பன்னும் படம்விரித்துப் பச்சைமயி லாடுவதும், பிள்ளைக் கருங்குயிலோர் பின்பாட்டுப் பாடுவதும், கொள்ளை மகிழ்ச்சித் தமிழ்நாடு கொண்டாய் நீ! குப்பையெலாம் மாணிக்கக் கோவை, கொடுந்தூம்பிற் கப்பும் கழுவடையில் கண்மணியும் பொன்ணியும்! ஆடும் குளிர்புனலோ அத்தனையும் பன்னீராம்! சூடா மணிவரிசை தூண்டாச் சரவிளக்காம்! எப்போதும் தட்டார் இழைக்கும் மணியிழையில் கொப்பொன்றே கோடிபெறும் கொண்டைப்பூ [என்பெறுமோ? ஐந்தாறு வெண்ணிலவும் ஆறேழு செங்கதிரும் வந்தாலும் நாணும் வயிரத் திருகாணி, ஒன்றுக்கே வையத்தை ஒப்படைக்க வேண்டுமெனில், உன்மார்பின் தொங்கலுக்கு மூன்றுலகு போதுமா? மின்காய்த்த வண்ணம் மிகுமணிக ளோடுபசும் பொன்காய்த்த பூங்கொடியா ரோடுதம் காதலர்கள் எண்ண மொன்றாகியே இல்லறத் தேர்தன்னைக் கண்ணுங் கருத்தும் கவருமோர் அன்புநகர், ஆரும்நிகர் யார்க்கும் அனைத்தும் சரியங்கென் றோரும்நகர், நோக்கி ஓடுந்தமிழ் நாடு நின்நாடு! செல்வம் நிறைநாடு கண்ணுறங்கு பொன்னான தொட்டிலில் இப்போது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/59&oldid=1443370" இலிருந்து மீள்விக்கப்பட்டது