பக்கம்:இசையமுது 1, 1984.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் பகுதி பாவோடும் பெண்கள் நடை ஓவியங்கள்! அடடா! நடுவீதியிற் பாவோடும் மடவார்- நடை ஓவியங்கள்! இடதுகை திரிவட்டம் எழிலொடு சுழலும் ஏந்தும் வலதுகை வீசுமுன் அசையும்— நடை ஓவியங்கள்! தண்டை யாடிடும் காலில்! கெண்டை விழிபோகும் நூலில்! கொண்டை மேலெலாம் நறுமலர்க்காடு கொடியிடை அசையும் மிக அழகோடு நடை ஓவியங்கள்! உலகினுக் குடை தேவை உடைக்கு வேண்டும் நூற்பாவே உலவும் மங்கைமார் இதனை எண்ணுவார் உயிரும் உணர்வுமாய்த் தொண்டு நண்ணுவார்- நடை ஓவியங்கள்! 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/6&oldid=1443321" இலிருந்து மீள்விக்கப்பட்டது