பக்கம்:இசையமுது 1, 1984.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 தறித்தொழிலாளி நினைவு இழை யெலாம் அவள் பூங் குழலோ! கைத்தறியின் - பிழைசெய்தாள் என்றுதாய் துரத்தினாள்-என் விழியெலாம் அவளையே பொருத்தினாள் தொழில் முடிந்ததும் உணவுண்டு-நான் தூங்கு முன்னே எனைக்கண்டு-மங்கை "எழுதினீர்களா மேற்கொண்டு-பதில் என்தாய்க்” கென்று கேட்டதுண்டு - தேன் பிழியும் அவளிதழ் தின்றதா பிழை?- அவன் பின்னும் என்னிடம் நின்றதா பிழை? இசையமுது தார்கொண்ட நாடாவைக் கையினால்-நான் தறியில் கோப்பதும் தேவை-அன்றோ? பார்கொண்ட மானத்தை-நான் பாதுகாப்பதும் தேவை - மிகச் சீர்கொண்ட என்குளிர்ப் பூங்காவை-நான் சேரவும் கேட்க வேண்டும் அம்மாவை! இழை இழை இழை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/7&oldid=1443322" இலிருந்து மீள்விக்கப்பட்டது