பக்கம்:இசையமுது 2, 1952.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 இசையமுது நாணிக்கண் புதைத்தல் தாமரை முகத்தினைத் தளிர்க்கரம் மறைத்ததடி - இளத்தையலே பூமது வருந்திடும் புதுவண்டுபோல் மனம் புழுங்குதடி மயிலே, வழங்கும் தமிழ்க்குயிலே! வீழிமலர் மறைத்ததில் கழிமயல் ஆகுதடி- (தாமரை) இளந்தையலே பிழிந்த அமுதத்தைப் பிசைந்த கனிரசத்தை விழுந்து புசித்துவிடின் ஒழிந்து விடுமெனவே (தாமரை) நாணப்படுவதிங்கு நாணயமில்லையடி-இளந்தையலே ! காணப்படும் நிலவைக், கரம்பொத்திவிடுவதில் ஆணழகன் சகித்தல் அருமை அருமையடி! (தாமரை) இளந்தையலே! மலர்க்கொடி விலக்கடி மதிமுகம் மறைத்தகரம்- இலக்குத் தவறுதடி என்முகம் உன்முகம் இணைத்திணைத் திழுத்திழுத் தணைத்தணைத் தமு [தளி! (தாமரை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/19&oldid=1499404" இலிருந்து மீள்விக்கப்பட்டது