பக்கம்:இசையமுது 2, 1952.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கருத்துரைப் பாட்டு. இசையமுது தலைவன் கூற்று இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபின் பிரிவர் என்று கருதி அஞ்சிய தலைமகட்குத் தலைவன் கூறியது என் தாய் யாரோ ! உன் தாய் யாரோ !- பெண்ணே என் தந்தை உன் தந்தை உறவினர் அல்லரே இன்றிங் கேஉனை எவ்வா றடைந்தேன் ? நீஎன்னை எவ்வா றறிந்தாய் ?-நாம் செம்மண் நிலமும் பெய்த மழையும்போல் சேர்ந்தோம் அடடா இன்பம் ஆர்ந்தோம் (எ) இரண்டு நெஞ்சில் வீறிட்ட காதலே இருவரை யும் சேர்த்த திவ்வையமீதே மருண்ட மக்கள் மாப்பிள்ளை பெண்களை மணத்தில் கூட்டுவ தாக எண்ணுவார் (எ) (குறுந்தொகை 40. செம்புலப்பெயனீரார் பாடற் கருத்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/29&oldid=1500205" இலிருந்து மீள்விக்கப்பட்டது