பக்கம்:இசையமுது 2, 1952.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் பகுதி யாரப்பனே நலம் செய்வோன்- உரை இந்தப் பெரு வையத்திற்கே? 5 கற்சிலை செய்த கற்றச்சன்- இரு கைதொழும் கோவிலின் வேலன் நற்கலை ஈபவன் யாவன்- இதை நன்கு விளக்கிடு தம்பி ! முற்றும் இசைத் தொழிலாளி- வாய் மூடி. அருள் செய்யும் கண்ணன் நற்சுவை தந்தவன் யாவன்- நீ நன்றி செலுத்துதல் யார்க்கு? கடவுள் அணிந் திட்டமாலை-பூங் காவிற் சிரிக்கின்ற முல்லை உடைபட்ட நெஞ்சத்தில் தம்பி-நல்ல உயிர் கொண்டு சேர்ப்பது யாது?. படைகொண்ட மன்னவன் செங்கோல் -சிறு பண்ணையிலே பொதுத் தன்மை எடை போட்டு நீ கூறுவாயோ-இங்கு.. எது நன்மை எதுதீமை தம்பி! கொய்தான பிழையான புதுநூல்- பிறர். நூல் கண்டு செய்திட்ட பெருநூல் வையத்தில் எதுதம்பி வேண்டும் நீ : வாய்விட்டு விள்ளுவாய் தம்பி! உய்யும் புரோகிதத் தந்தை-அவன், உத்தியோகம் பார்க்கும் மைந்தன் செய்யும் திருத்தொண் டிரண்டில் தம்பி செம்மையாம் ஒன்றினைக் கூறு. 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/53&oldid=1500243" இலிருந்து மீள்விக்கப்பட்டது