உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடைத்தரக் கட்டுரை இலக்கணம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

I. சொற்றொடரியல் - SYNTAX 1. சொற்றொடர் அமைப்பு Structure of Sentence சொற்றொடர், தனிச்சொற்றொடர் (Simple Sent- ence), கூட்டுச் சொற்றொடர் (Compound Sentence), கலப்புச் சொற்றொடர் (Complex Sentence) என மூவகைப்படும். இம்மூன்றும் அல்லது இவற்றுள் இரண்டு சேர்ந்தது கதம்பச் சொற்றொடர் (Mixed Sentence) ஆகும்.* எ-டு: பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது.- தனிச்சொற்றொடர். குறிப்பு: பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது; அதன்பின், பாண்டியன் சோழநாட்டின் ஒரு பகு தியைக்கைப்பற்றினான்.-கூட்டுச்சொற்றொடர். பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்ட தென்று சிலப்பதிகாரங் கூறுகின்றது.- கலப்புச் சொற்றொடர். பழம்பாண்டி நாடு முழுவதையும் கடல்கொண்டது; அதன்பின், பாண்டியன் வடக்கே வந்தான் என்று தமிழ் நூல்கள் மிகத்தெளிவாய்க் கூறினும், சிலர் இதை ஒப்புக் கொள்கின்றிலர்.-கதம்பச் சொற்றொடர். கூட்டுச்சொற்றொடரில், இரு சொற்றொடர் (Clauses) இருப்பின் இணைக் கூட்டு (Double) என்றும், பல சொற்றொடரிருப்பின் பல்கூட்டு (Multiple) என்றும் கூறப்படும்.

- இலக்கணந் தெரியாத இளமாணவர் கதம்பச்சொற் றொடர் எழுதுதல் கூடாது.
  • சொற்றொடர் வகைகளின் வரையறவுகளை, அதாவது இயல்விளக்கங்களை (Definitions) உயர்தரக் கட்டுரை இலக்கணத்துட் கண்டுகொள்க.