பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 12 —

நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடுவண் அமைச்சர்கள் ஆனார்கள். அல்லது ஆனபின் கொள்ளையர்களாக மாறினார்கள்.

இலக்கம் இலக்கமாய்க் கொள்ளை அடிப்பவர்கள், அல்லது அடிக்க விரும்பியவர்கள் சட்டமன்றங்களைக் கைப்பற்றினார்கள். உறுப்பினர்களாக, மாநில அமைச்சர்களாகப் பதவியேற்றார்கள்.

ஆயிரம் ஆயிரமாகக் கொள்ளை அடிப்பவர்கள், அல்லது அவ்வாறு விரும்பியவர்கள் நகராட்சி உறுப்பினர்கள், அல்லது ஒன்றியச் செயலாளர்களாகப் பதவியேற்றார்கள்.

மொத்தத்தில் அரசியலை ஒரு வருவாய்க்குரிய கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்த நிலையெல்லாம் இந்திரா தொடங்கி வைத்து, இராசீவ் விரிவாக்கம் செய்த முறைகளாக ஆகிவிட்டன.

உலக வைப்பகக் கணக்குப்படி பொருளியலில் இந்திரா ஆட்சிக்கு வந்த 1966-இல், இந்தியா உலகப் பொருளியல் வளர்ச்சியில் 85-ஆவது இடத்தில் இருந்தது. 1977-இல் அவர் 11 ஆண்டுகள் இந்திய அரசியலில் தலைமையேற்ற பின், அஃதாவது அவர் முதல்முறை பதவியை விட்டு வெளியேற்றப்படுகையில், அது 111-ஆவது இடத்திற்கு வந்து, அதன் பின் அது கடைசி இடத்திற்கு வந்தது.


இந்திரா ஆட்சியில் கொள்ளையடிப்புகள்!

இந்திரா ஆட்சியில் ஆசிய விளையாட்டு 1982 நவம்பரில் நடந்தது. அதில் பல கோடி உருவாக்கள் அரசின் பல்வேறு தரப்பினரால் கொள்ளையடிக்கப்பட்டன. தொடக்கத்தில் அதற்கு 70 கோடி செலவாகும் — செலவு ஆகலாம் — என்று மதிப்பிடப் பெற்றது. பிறகு 150 கோடி ஒதுக்கப்பட்டது. இறுதியில் அதற்கு மக்கள் வரிப்பணத்தில்