பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 18 —


சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே!
திக்கிநா விழுக்க! நெஞ்சு தெறிக்க!

எந்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும்
நொந்துயிர் துடிக்கையில் உளக்குலை நொய்ந்தே
இட்ட சாவங்கள் இணைந்து கூடி
முட்டுக நின்னுயிர்! மூளி, நீ யாகுக!

—என்று மின்னி, இடித்துச் சாவம் தந்து, உள்ளக்கனல் தணிகிறது. இப்பாடல் நடந்தியலும் நடுவில்,

தமிழினம் தகைக்கும் தருக்கனே! நின்குடி
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!

— என்று, அழலும் நெஞ்சின் ஆர்ப்பு அடங்கிச் சுழலும் நினைவுடன் சூழ்ந்து நின்று,

தணலும்எம் நெஞ்சின் தவிப்பை
மணல்,நீர், தீ, வளி, வானம் — ஆற் றுகவே!

— என்று சான்றியம் வைத்துக் கூறிய கூற்றன்றோ, இராசீவுக்கும் அவர் கொடுமைகளுக்கும் கூற்றுவனாய் நின்றது! இலங்கைத் தமிழினத்தவர் மனத்துயரும், எம் மனத்தவிப்பும் இட்ட சாவம் எவ்வாறு முட்டியது, பார்த்தீர்களா? உண்மையின் விளைவு அதுதான்! 'அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்' அதுதான்!

இராசீவின் மறைவு உண்மையில் அவரின் வரலாறன்று! ‘தென்மொழி’யின் வரலாறு ஆகும் என்க!


இட்ட சாவம் முட்டிய வகை:

இப்பாடலில் வந்து விழுந்துள்ள சொற்களில் சில முன்னறிவிப்புகள் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தப் பெற்றிருப்பது வியப்பினும் வியப்பு! அக்குறிப்பு மொழிகளை ஆய்ந்து அறவுள்ளத்தின் வெளிப்பாட்டை ஊன்றிக் கவனித்து அறத்தின் உறுதியைக் கண்டு உணருங்கள்!