பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 19 —

வெந்து அழியும் நின் உடல் — என்பது, அவர் குண்டு வெளிப்படுத்திய தணலால் வெந்து மடிவர் என்பதையும்,

நின்னைக் கடும்புலி வரி எனச் சாவு கவ்வுக — என்னும் தொடர், அவரைப் புலிப் படையைச் சார்ந்த ஒரு புலி வந்து சாவச் செய்தது என்பதையும்,

திடும் என நினையொரு தீச்சுழல் சூழ்க — என்னும் தொடரில், 'திடீரென' என வாராது, 'திடும்' என வந்தது, அவரை அணுகி வெடித்த குண்டின் வெடியொலியாகிய 'டும்' எனும் குறிப்பொலி குறிப்பிடப் பெற்றிருப்பதையும், அவர் அவ்வாறு குண்டு வெடித்துப் பற்றியெரிகையில், அந் நெருப்புச் சுழல் பதினான்கடி உயரம் எரிந்ததை அனைவரும் தொலைவிலிருந்து கண்டதையும், அவர் மறைவால் அவர் மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சியும், தமிழரை அழிக்கும் அரக்கத் தன்மையும்(அரக்குதல் — அழித்தல்) அதிகாரச் சூழலும், வீழ்ச்சியுற்றதையும் இப்பாடல் முன்னறிவிப்பாக, முன் எச்சரிக்கையாக நுவன்றதையும் உணர்ந்து கொள்க!

மேலும் இதுவரை சாவப் பாடல் பாடிய, அஃதாவது அறம் பாடிய புலவர் சிலர் பாடல்களில் உள்ள கருத்துகள் பொதுவில் வெளிப்பட்டவையே! 'சாவுக', 'மறைந்தொழிக' எனும் பொதுவாக இறக்கின்ற — மறைந்தொழிகின்ற கூற்றுகளையே அவை கொண்டிருந்தன. ஆனால், இவ்வறப் பாடலில் அவர் எவ்வெவ்வாறு சாவ — செத்து ஒழிய — வேண்டுமென்று கூறப்பெற்றதோ, அவ்வவ்வாறே அவர் செத்தொழிந்ததுதான் வியப்பினும் வியப்பு! அறத்தின் அனைத்து உணர்வுக் கூறுகளையும் புலப்படுத்தி நிற்பது!

அஃதாவது, அவர் திடுமென நோயினாலோ, ஒரு நேர்ச்சியினாலோ இறவாமல் “அவரது உடலை ஒரு கடும் புலி கவ்வியது போலச் சாவு கவ்வ வேண்டும்; 'தி...டும்' என ஒரு தீச் சுழல் சூழ்ந்து எரியுண்ண வேண்டும்; உடல் வெடித்துச் சுக்குநூறாகச் சிதற வேண்டும்; அச்சூது நிறைந்த —