பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 20 —

பேசிய— நாக்கு — திக்கித் திணறி உள்ளே இழுத்துக் கொள்ளப் பட வேண்டும்; அவர் பொய் நெஞ்சம் — நெஞ்சாங்குலை — வெடித்துத் தெறித்து விழ வேண்டும்" என்று பாடலில் அறம் பொங்கியெழுந்து காலத்திற்குக் கட்டளையிடுகிறது.

இனி, அறவாசிரியன் இடுகின்ற சாவம் மட்டுமே இங்கு ஏவப்பெறவில்லை; அவ் விராசீவ் என்னும் கொடியரால் அழிக்கப் பெற்ற ஆயிரக் கணக்கான இளைஞரும், ஒன்றுமறியா, இரங்கத்தக்க பெண்டிரும், அவர் ஏவிய படைகளால் அழிக்க உயிரோடு சிதைக்கப் பெறுகையில், அவர்தம் உயிர்கள் துடித்து, உள்ளம் உலவும் நெஞ்சாங் குலைகள் நொய்ந்து, நைந்து இட்டு வைத்த சாவங்கள் அனைத்தும் ஒன்றாக / இணைந்து, வலுப்பெற்றுக் கூடி, செயல் வடிவம் பெற்று, அவர் உயிரை வந்து முட்டட்டும்; அவ்வாறு –முட்டலினாலே அவர் உடலின், முழுவடிவம் சிதைந்து மூளியாகி விடட்டும் — என்ற இவ்வறப் பாடல் நுவல்கிறதையும், அவ்வாறே நடந்துற்றதையும் அனைவரும் கண்டு இறும்பூது எய்துக!

இனி, இச்சாவப் பாடல் வெளிப்படுத்தப் பெற்ற பின், இதில் கூறப் பெற்ற நிகழ்வுகள் கட்டாயம் நிகழ்த்தப் பெறல் வேண்டும் என்று, நிலம், நீர், தீ, வளி, வானம் ஆகிய ஐம்பூதங்களுக்கும், இவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்ற கட்டளை வேறு இப் பாவின் இறுதி அடிகளில் கூறப் பெற்றுள்ளன.

அஃதாவது, 'தமிழினத்தைச் சீரழிக்கும் இச் செருக்குப் பிடித்த ஆட்சியாளரின் மறைவால் அவரின் குடி உயர்வின்றித் தாழ்ந்து, அமிழ்ந்து போக வேண்டும் என்றும், அக்குடி இவர் செய்த கொடுமைகளால் ஓர் அணுவின்றிப் படிப்படியாக அழிந்து போகவேண்டும் என்றும் கூறி, இவ்வாறு, தணந்து — கனன்று கொதிப்புற்றிருக்கும் இவ்வறவாசிரியனின் நெஞ்சத்தின் தவிப்பை, ஆற்றாமையால் வெளிப்போந்த இச்சாவக் கட்டளையை அவ்வைம்பூதங்க