பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 21 —

ளும் செயல்படுத்துக' என்றும் முடிவு கூறி இப்பாடல் நிறைவுறுகிறது.

அப்பாடலில் கூறப்பெற்றது போலவே, இராசீவினது உடலை, மண் அணைத்துக் கொண்டது; தீ பற்றிக் கொண்டது; அவர் சாம்பலை நீர் உள் வாங்கிக் கொண்டது; அதைப் பனி(இமய)மலைச் சாரலில் தூவியபொழுது, அவ்வுடல் அணுக்களைக் காற்று தன்னுடன் கரைத்துக் கொண்டது; வானம் அவரின் ஆவியைச் சுவரிக் கொண்டது!

இவ்வகையில் இவ்வறவாசிரியன், இராசீவால் அழிக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்களுடன் இணைந்து கூடி இட்ட சாவம் வந்து அவரை முட்டிக் கீழே தள்ளியது என்க !

இப்பாடல் இன்று நேற்றன்றி, மூன்றாண்டுகளுக்கு முன்னர் 1988 — ஏப்பிரலில் எழுதி வெளியிடப் பெற்றது. பொதுவாகவே அறப் பாடல்கள் மூன்று நாள்களில், அது தவறின் மூன்று மாதங்களில், அதுவும் தவறின் மூன்று ஆண்டுகளில் செயலுக்கு வரும் தன்மையுடையன. ஆய்வாளர்கள் இவ்வறவாசியரின் முந்தைய அறப்பாடல்களை நோக்கி அவ்வுண்மையைத் தெளிந்து கொள்க. அது போலவே இப்பாடலும் மூன்று ஆண்டுகளில், அஃதாவது 91 - மே மாதத்தில் செயலுக்கு வந்து, அச் சாவம் நன்கு நிறைவேறி இதன் ஆசிரியனுக்கும் மன நிறைவைத் தந்தது. தமிழின மக்களுக்கும் ஓர் ஆறுதலைத் தந்தது.

இவ்வாறின்றி, இப்பாடல், இராசீவின் மறைவிற்கு இரண்டொரு மாதங்களுக்கோ, இரண்டொரு கிழமைகளுக்கோ முன்பே எழுதப்பெற்று வெளிவந்திருக்குமானால், அதன் எதிர்விளைவுகளே வேறு வகையாக உருவாகியிருக்கும். இவர் தாம் இந்தச் செயலைத் திட்டமிட்டு, அந்தத் தமிழ் வீரப்பெண் தனுவிடம் கூறிச் செயல்படுத்தியிருக்கிறார்; அல்லது எழுதிய பின்னர்தாம், பிறர்க்கு இராசீவை இவ்வாறு கொல்ல