பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 22 —

வேண்டும் என்ற எண்ணமே தோன்றித் திட்டமிட்டிருக்க வேண்டும் என்று கூறி நம்மேல் கடுமையான குற்றம் சாட்டிக் கொடுமையான தண்டனையைத் தந்திருப்பார்கள்!

இராசீவ் மறைவுக்குப் பின் பார்ப்பனர் ஆடிய ஆட்டங்கள்:

இனி, இராசீவின் மறைவிற்குப் பின் தில்லியிலும் தமிழ் நாட்டிலும் நிகழ்ந்த, நிகழுகின்ற செய்திகளைப் பற்றிச் சிறிது பேசுவோம்.

இராசீவ் மறைவைப் பற்றித் தில்லியிலுள்ள பேராயக் கட்சித் தலைவர்களுள்ளும், தமிழகத்திலுள்ள பேராயக் கட்சித் தலைவர்களுள்ளும், உண்மையிலேயே வருத்தப்பட்டவர் ஒரு சிலரே! மற்றவர்களெல்லாரும் அவரால் பெற்ற பணம், பதவிகள் இனி கிடைப்பதற்கு வாய்ப்பில்லையே என்ற நிலையிலும், சிலர் அவர் தொலைந்ததே நல்லது என்ற நிலையிலுமே நினைத்து வருத்தமும், மகிழ்வும் கொண்டார்கள் என்றே கருதுதல் வேண்டும்.

இராசீவின் சாவை ஏதோ — ஒரு மேன் மகன் மறைவாகவே விளம்பரப்படுத்திக் கலகலத்துப் போயிருக்கும் தங்கள் கட்சியைக் கட்டுவிக்கவே பயன்படுத்திக் கொண்டனர். சேரியில் வாழும் முதிய, இளைய ஏழைப் பெண்களையும், முதியவர்கள் சிலரையும் அழைத்து, அவர்களுக்கு உணவும், பணமும் கொடுத்து, ஏதோ தங்களுக்கெல்லாம் படியளந்த ஆண்டவன் ஒருவன் மறைந்ததுபோல், அவர்கள் மாரிலும், முகத்திலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழவைத்து, அக்காட்சிகளைப் படம் பிடித்துத் தொலைக்காட்சிகளிலும், திரையிலும் காட்டி, அவரைத் தெய்வ நிலைக்கு உயர்த்திப் பார்ப்பன அதிகாரிகளும், அமைச்சர்களும், அவர்களின் அடிவருடிகளும் ஒரு மாயையே மக்களிடம் உருவாக்கிக் கொண்டனர்.

இனி, அவர் மறைவை மக்கள் இரக்கம் கொள்ளும்