பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 24 —

ளின் உள்ளத்திலும் உறுத்தல்களாகவே இருந்து வந்தன, அவற்றைச் சீர்குலைப்பதற்கு இராசீவ் என்னும் காசுமீரப் பார்ப்பனரைப் பயன்படுத்திக் கொண்டு வந்தது பார்ப்பனீயம். அதன் செயற்பாடுகளில் ஒன்றுதான் இராசீவ் இலங்கைக்கு அனுப்பிய அமைதிப்படை. அதற்கும் தடை வந்தவுடன் இராசீவை ஆட்சியில் மீண்டும் ஏற்றிவைக்க உறுதி பூண்டிருந்தது பார்ப்பனீயம். இடிமேல் இடி விழுந்தது போல் இராசீவ் மறைவு நேரவும், அதையே சாக்காக வைத்துக்கொண்டு தமிழகத்தில் ஆட்சி அமைத்த செயலலிதா என்னும் பார்ப்பனீயப் பச்சைப் பாம்பு, விடுதலைப் புலிகளை விரட்டோ விரட்டென்று தமிழகத்தை விட்டே விரட்டி வருகிறார். தமிழர்களுக்கு இங்கு மட்டுமன்று, இவ்வுலக உருண்டையில் எங்குமே உரிமை பெற்ற ஒருநாடு கிடைத்துவிடக் கூடாதென்னும் எண்ணத்தில் விடுதலைப் புலிகளின் மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அவற்றுக்கு நடுவண் அரசும் துணையாகவும் தூண்டுகோலாகவும் நின்று வருகிறது.

இக்காலகட்டத் தமிழக அரசியல் பெரும் இக்கட்டானது. பார்ப்பனீயத்தை விடப் பார்ப்பனீயத்திற்குத் துணைபோகும் இரண்டகர்களும் காட்டிக் கொடுப்பான்களும் தங்களுக்கு நலம் சேர்த்துக்கொள்ள இக் காலகட்டத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ள முனைந்து நிற்கின்றனர். அதன் வெளிப்படையான விளைவுகளே நெடுஞ்செழியன், சோமசுந்தரம், கிருட்டிணசாமி, அரங்கநாயகக் கூட்டங்கள். ஆளுக்கு ஆள் மிடா விழுங்கிகள்! கடப்பாரையையே கரைத்துக் குடித்து ஏப்பம் விடுகின்ற ஊழல் பெயர்வழிகள், இவர்களின் ஒட்டு மொத்தக் கூட்டுத் துணையால், முதல்வர் செயலலிதா திரைப்படத்தில் ஆடியதற்கு மேல் அரசியல் அரங்கில் 'தையா தக்கா' என்று குதியாட்டம் போடத் தொடங்கிவிட்டார்.

இந்த இழிபாடுகளையும், இடிபாடுகளையும் எவ்வாறு