பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 31 —

காலத்தைவிட, ம.கோ.இரா. காலத்திலும், அவர்கள், மேலும் விழிப்பும் எழுச்சியும் பெற்றிருந்தனர். இனி ம.கோ.இரா. காலத்தை விட, இன்றைய செயலலிதா காலத்தில் பார்ப்பனர்கள் முனைப்புடனும் முழுத்திறனுடனும் சூழ்ச்சியுடனும் இயங்குகின்றனர் என்பதை யாருமே மறுக்க முடியாது.

செயலலிதா பார்ப்பனீயத்தின் ஒரு கொடுமுடி. 'துக்ளக்' 'சோ' இன்னொரு கொடுமுடி. அத்துவானி, வாச்சுபாய் போன்றவர்கள் வேறொரு கொடுமுடி; தலைமையமைச்சர் நரசிம்மராவ் போன்றவர்கள் மற்றுமொரு கொடுமுடி. இவர்களைப் போலவே தினமணி கசுத்தூரி ரங்கன் போன்றவர்கள் தமிழையும், தமிழர்களையும் நயவஞ்சகமாக வீழ்த்தும் பெரும் பள்ளத்தாக்குகள். இத்தகைய எதிர்ப்புகள், சூழ்ச்சிகள், நயவஞ்சகங்கள் போன்றவற்றின் நடுவில்தான் தமிழர்கள் தம்தம் மொழிக்காகவும், இனத்துக்காகவும், நாட்டிற்காகவும் போராடவும், போரிடவும் வேண்டியுள்ளார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

எனவே, ஓர் இந்திரா, ஓர் இராசீவ் ஒழிந்ததனாலேயே தமிழினம் தான் வெற்றிக்குகந்த சூழ்நிலையை அடைந்து விட்டதாக நாம் கூறிவிட முடியாது. தமிழின எதிரிகள் ஒரு படி வலுப்பெறும் அதே நிலையில், தமிழின இரண்டகர்களும் வீடணர்களும் அதற்கும் மேல் ஒரு படி மிகுந்து நின்று அவர்களுக்குத் துணை போகிறார்கள். செயலலிதா பேசுவதற்கு மேல், நெடுஞ்செழியனும், கிருட்டிணசாமியும், சோமசுந்தரமும், வீரப்பனும், அரங்கநாயகமும் பேசுவதைப் பார்க்கும் பொழுது இவர்களின் உடலில் ஓடுவது தமிழ்க் குருதியா அல்லது பார்ப்பனக் குருதியா என்பது தெரியவில்லை .

செயலலிதா ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர் அறிவித்திருக்கும் செயல் திட்டங்களுக்கு அளவில்லை. ஆனால், அவற்றுள் செயலுக்கு வந்தவை விரல்விட்டு எண்ணத்