பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 32 —

தகுந்தவையாகக்கூட இரா என்பதைக் கருத, இத்தமிழின வீடணர்கள் எதைக் கருத்தில் கொண்டு செயலலிதாவை அளவிறந்து பாராட்டுகின்றனரோ, நமக்கு விளங்கவில்லை. அவர் ஒவ்வோர் ஊருக்கும் செல்லும் பொழுது பண்ணுகிற ஆர்ப்பாட்டமும் அழிம்பும் பகட்டுகளும் இருக்கின்றனவே, அவை, நாட்டு நலன் கருதும் நன்னெஞ்சங்களுக்குப் பொறுத்துக் கொள்ள இயலாத துன்பத்தைத் தருவனவாகும்.

தமிழினம் மீட்சி பெறவேண்டும்!

இனி, எல்லாவற்றுக்கும் மேலாக, செயலலிதாவும், பங்காரப்பாவும், நரசிம்மராவும் அரசியல், அதிகாரம், ஆட்சி என்னும் பெயரால், காவிரி நீர்ச் சிக்கலை இனச் சிக்கலாக மாற்றிக் கருநாடகத்தில் தமிழர்களை அழித்தொழிக்கும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. இக்கொடுமைகளை எதிர்த்துத் தமிழகத் தமிழர்கள் குரல் கொடுப்பதைத் திசை திருப்புவதற்கு எனக் கருநாடகத் தமிழர்களுக்கு இழப்பீடுகள், ஏதிலியர் காப்பகங்கள், உதவித் தொகைகள், உணவுப் பொருள்கள், துணிமணிகள் முதலியவை தருவது போலும் அறிவிப்புகள் மாநில அரசிலிருந்தும், நடுவண் அரசிலி ருந்தும் அன்றாடம் வெளிவருகின்றன.

கருநாடகத் தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்கள்; வெளிப்படையாக வெட்டப்படுகின்றனர்; வீடுகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன; பொருள்கள் கோடிக் கணக்கில் கொள்ளையடிக்கப்படுகின்றன; சூறையாடப்பெறுகின்றன; பெண்கள் நட்ட நடுச் சாலையில் கற்பழிக்கப்படுகின்றனர்; சேலைகளை அவிழ்த்துக்கொண்டு ஓட ஓட விரட்டி யடிக்கப்படுகின்றனர்; குழந்தைகள் எரிகின்ற நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றனர். இத்தனையும் இந்திய ஒருமைப்பாட்டு எல்லைக்குள், பாரத கலை, பண்பாடு, நாகரிகம் பேசும் மடயர்களின் ஆட்சி வரம்புக்குள் நடைபெறுகின்றன. இவற்றைத் தடுக்கவோ அடக்கவோ, குற்றவாளிகளைத்