பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—௪ —

-ளுக்கிடையில் நிலவாய் ஒளிர்பவரே நம் அருந்தமிழ்ப் பாவலரேறு ஐயா அவர்கள்.

“ஓங்கிக் கட்டிய உயர்ந்த மாளிகை!
உலாவக் கட்டிய மேற்புற மாடிகள்;
தூங்கக் கட்டிய தனிநிலை அறைகள்!
தொங்கு மாடங்கள்; ஊஞ்சல் தூலிகை!
தாங்கிய விளக்குகள்! பலகணித் திரைகள்!
தரையெலாம் விரிப்புகள்! பல்வண்ண ஓவம்!

— என்று பணக்காரர்களின் வாழ்நிலையை விரிவாய்ச் சுட்டிக் காட்டிடும் அவர்,

பாங்காய் இவற்றுளே குபுகுபு குபு — வெனப்
பாட்டாளி மக்கள் புகுகின்றார் பாருங்கள்!
ஓங்கிய செல்வரே, உணருங்கள்! அப்படி
ஒருநாள் வரத்தான் போகிறது — இவ்
வுலகம் பொதுவென ஆகிறது!" — கனிச்சாறு

— என்று ஓங்கிச் சொல்லி ஏழை மக்களின் எழுச்சியைக் காட்சியாக்கியவர்.

"ஆட்டிப் படைக்கும் அரசுக்கும், ஆரியர்க்கும்
ஈட்டியால் செந்தமிழர் தீட்டும் இறுதியுரை...”

— என்று வாட்டி வருத்தும் ஆளுமையர்களை ஈட்டியால் தமிழர்க்குச் சுட்டிக் காட்டியவர்.

எண்பதுகளில் எழுச்சியுற்ற ஈழ விடுதலைப் போரை ஒடுக்கக் கிளம்பிய இந்திய வல்லாண்மையர்களின் உருவாய் இருந்த இராசீவின் கொடுஞ் செயல்கண்டு கொதிப்புற்றது, தமிழகம்.

ஆளுமை அரம்பன் இராசீவின் கொடுஞ்செயலால் ஏற்பட்ட நம் ஐயா அவர்களின் உள்ளக் கொதிப்பின் சிதறலே 'இட்ட சாவம் முட்டுக!'

தமிழர்தம் வாழ்வுரிமைக்காய் அணிதிரண்டு கருவி ஏந்திச் செயலாற்ற வல்ல ஒரு பெரும்படை அக்கால் இருந்திருப்பின், எதை அரசியல்வழி முடிவெடுத்துச் செயலாற்றிடுமோ, அதை நம் பாவலரேறு ஐயா அவர்கள்