பக்கம்:இட்ட சாவம் முட்டியது.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

இட்ட சாவம் முட்டியது!
(இராசீவின் இறுதி)


மூவகைப் பார்ப்பனீயக் கோட்பாடுகள்:
(இட்லரியம், சாணக்கியம், சங்கராச்சாரியம்)


"ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தால், அதை மக்கள் மெய்யென்று நம்பி விடுவார்கள்” என்பது வேதக் காலத்திலிருந்து இன்றுவரையிலுள்ள பார்ப்பனீயக் கோட்பாடு. இதைத்தான் ஆரியத் தலைவன் இட்லர் கடைப்பிடித்து, உலகத்தையே தன்வயப்படுத்தும் பேராசை கொண்டு, அன்றிருந்த செருமானிய யூதர்களை இலக்கக் கணக்கில் கொன்று அழித்து,
உலகத்தையே தன்வயப்படுத்த எண்ணி, இறுதியில் தற்கொலை செய்து கொண்டு அழிந்து, குருதிக்கறை படிந்தவரலாற்றைத் தனதாக்கிக் கொண்டான்.
"தப்பித் தவறி ஆட்சிக்கு வந்து விடுகிற பார்ப்பான்,-