47
வேண்டி நின்றோரை "வகுப்பு வாதிகள்” என்று கூறலாயினர். கட்டுரையாளர் இவ்விதம் குறிப்பிட்டு, அக்கருத்துக்கு அரணாக "தினசரி", "விடுதலை" போன்ற பத்திரிகளினின்றும் மேற்கோள் பகுதிகளை எடுத்துக் காட்டி விளக்குகிறார். கடந்த பல ஆயிரம் ஆண்டாண்டுகளாகப் பரவி, ஊன்றி, பெருவாரி மக்கள் கூட்டத்தினரை "பிறவி அடிமைகளாகவும்" "நடைப் பிணங்ககளாகவும்" ஆக்கி விட்ட இம்முறை அடியோடு அழிக்கப் பெற வேண்டுமெனக் கட்டுரையாளர் அடுத்து வலியுறுத்துகிறார். இங்கு தான் அவரி "பார்ப்பனியம்" ("பிராமணிஸம்") என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். தானும் தன் கருத்து, கொண்ட பிறரும் பிராமணர்கள் மீது வெறுப்பு கொண்டோரல்லரென்றும், பிராமணிய முறையினையே தாங்கள் எதிர்ப்பதாகவும் கட்டுரையாளர் திட்ட வட்டமாகக் கூறுகிறார். பிராமணியத்தினால் விளையும் தீமைகளை எடுத்துக் காட்ட வன்மொழிகளே பிரயோகப் படுத்தப்படகின்றன. உதாரணமாக சில பகுதிகள்;——
கட்டுரையின் கடைசிப் பகுதி இம்முறையை அழித்தொழிப்பதற்கான மார்க்கங்களைக் கூறுகிறது. பெருவாரி மக்கள் கூட்டத்தாரிடையே ஒற்றுமை, கட்டுப்பாடு, வீரவுணர்ச்சி, தன்மானம் ஏற்பட்டால்தான் இம்முறையினை ஒழிக்கமுடியும் . அறிவுத் தெளிவுடனிருக்கும் எவரும் பார்ப்பனியத்தைக் காரணங்காட்டி