பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் யாருடன் பேசுகிறோம் என்பதைக் காண்பதற்காக அவர் அந்தக் கட்டை மேலே மிகவும் உயர்த்த வேண்டி யிருந்தது. வெடிகுண்டின் சிதறல் ஒன்று என்னைக் காயப்படுத்தி விட்டது. என் தலைக்கவசம்தான் என்னைக் காப்பாற்றியது, இல்லாவிட்டால் என் தலையே சுக்கு நூறாகச் சிதறிப் போயிருக்கும் என்று அவர் தணிந்த குரலில் கூறினார்; அத் துடன் தமது நீலம் பாரித்த, ரத்தமிழந்த உதடுகளால் புன்னகை செய்யவும் முயன்றார்: அந்தச் சிதறல் என் தலைக்கவசத்தைத் துளைத்துக் கொண்டு பாய்ந்துவிட்டது; நான் தலையைக் கைகளால் பற்றிப் பிடித்துக் கொண்டேன்; ரத்தம் பொங்கி வந்தது . அவர் தமது கைகளை உற்றுப் பார்த்தார்; பின்னர் தமது குரலை இன்னும்கூடத் தாழ்த்திக் கொண்டு இவ்வாறு கூறினார்: * 'நான் என் துப்பாக்கியையும், எனது தோட்டாக்களையும், கையால் எறியும் இரு வெடிகுண்டுகளையும் நண்பர் ஒருவரிடம் கொடுத்தேன் ; அவசரசிகிச்சை நிலையத்துக்கு ஊர்ந்து சென்றேன். திடீரென்று அவரது முகம், வெட்டி குண்டுகளின் வெடிப்புச் சத்தமும் எந்திரத் துப்பாக்கிப் பிரயோகத்தின் சடசடப்புச் சத்தமும் வந்து கொண்டிருந்த மேற்குத் திசை நோக்கிச் சட்டென்று திரும்பியது. பின்னர் அவர் வலுவும் உறுதியும் மிக்க உரத்த குரலில் இவ்வாறு கூறினார்: நான் திரும்பவும் வருவேன், அங்கு அவர்கள் என் உடம்பை ஓரளவுக்குக் குணப்படுத்தி விடுவார்கள். பின்னர் நான் திரும்பவும் எங்கள் கம்பெனிக்கு வந்து சேர்வேன். இந்த ஜெர்மானியர்களோடு சரிக்கட்ட வேண்டிய கணக்கு ஒன்று எனக்கு உண்டு! . அவரது தலை உயர்ந்திருந்தது; அவரது கண்கள் தலைக் கட்டுக்குக் கீழ் பளிச்சிட்டன; அவரது அந்தச் சாதாரண வார்த்தைகள் ஒரு வஞ்சின சபதம் போல் ஒலித்தன. நாங்கள் காட்டுக்குள் புகுந்தோம், அங்கு தரைமீது செந்நிறமான இலைகள் பரவிக் கிடந்தன – நெருங்கி வரும் இலையுதிர்காலத்துக்கான முதல் அறிகுறி அது. அந்த இலைகள் ரத்தக் கறைகளைப் போல், ஜெர்மன் படையெடுப்பாளர்கள் எனது தாயகத்தின் உடலின் மீது ஏற்படுத்திவிட்ட காயங்களைப் போல் தோன்றின. செஞ்சேனையில் தான் எத்தனை அற்புதமான நபர்கள் இருக்கிறார்கள்! என்று எனது. சகாக்களில் ஒருவர் தணிந்த குரலில் கூறினார்: **சிறிது காலத்துக்கு முன் ஒரு மாவீரனைப் போல் மாண்டுபட்ட மேஜர் வாய்த்செகோவ்ஸ்கியைத்தான்

எடுத்துக் கொள்ளுங்களேன், அவர் இங்கிருந்து சற்றுத் தொலைவி

92