பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்த கட்டிடங்கள் ஒன்றின் கீழறையில் இருந்து, நமது பீரங்கிப் பிரயோகத்தின் திசையைச் சரிப்படுத்திக் கொண் டிருந்தார். அப்போது பதினாறு ஜெர்மன் டாங்கிகள் கிராமத்துக் குள் புகுந்து, அந்தக் கட்டிடத்தின் முன்னால் வந்து நின்றனர் உடனே அவர் ஒருகணமும் தயங்காமல் தமது தொலைபேசியைக் கையில் எடுத்து, 'என்னை நோக்கிக் குறி வையுங்கள், சீக்கிரம். ஜெர்மன் டாங்கிகள் இங்கு தான் இருக்கின்றன' என்று பீரங்கி வீரர்களுக்கு உத்தரவிட்டார். இதே உத்தரவை அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறினார், இறுதியில் அந்தப் பதினாறு டாங்கிகள் அனைத்தும் அழிக்கப்பட்டன; நமது தற்காப்புக்கு நேர்ந்த ஆபத்தும் தவிர்க்கப்பட்டது. நாங்கள் மெளனமாக நடந்து சென்றோம். ஒவ்வொருவரும் அவரவ ரின் சிந்தனை களில் மூழ்கியிருந்தனர் ; என்றாலும், அந்தக் காட்டைவிட்டு வெளிவரும்போதோ, நமது நாட்டுக்கு எத்தகைய சோதனைகள் நேருமாயினும், அதனை வெல்ல முடியாது என்ற தன்னம்பிக்கை உணர்வோடு நாங்கள் எல்லோரும் வெளிவந்தோம். அது வெல்ல முடியாதது; ஏனெனில் அதனைப் பாதுகாக்க, லட்சோப லட்சக்கணக்கா ன, அடக்கமும் துணிவாற்றலும் மிக்க, சாதாரண மக்கள் திரண்டு நிற்கின்றனர்; பழுப்புநிறச் சட்டையணிந்த இந்த எதிரிக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் அவர்கள் தமது ரத்தத்தைச் சிந்தவோ அல்லது உயிரையும் கூடப் பலி கொடுக்கவோ தயங்கமாட் டார்கள். 1941 யுத்தக் கைதிகள் அவர்களது படைப்பிரிவு பாரீஸில் ரயிலில் ஏற்றப்பட்டு, கிழக்கு நோக்கி அனுப்பிவைக்கப்பட்டது. அவர்கள் வசம். பிரான்சில் அவர்கள் கொள்ளையடித்திருந்த பொருள்களும், மற்றும் பிரெஞ்சு ஒயின் புட்டிகளும், பிரெஞ்சுக் கார்களும் இருந்தன. பெட்ரோல் இல்லாத காரணத்தால் அவர்கள் தமது கார்களை மின்ஸ்க் நகரிலேயே விட்டுவிட்டு வர நேர்ந்தது; அங்கிருந்து அவர்கள் கால் நடையாகவே போர் முனையை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். ஜெர்மன் ஆயுதங்களால் பெற்ற வெற்றியாலும், பிரெஞ்சு ஒயின் மதுவினாலும், போதை

யேறிப் போயிருந்த அவர்கள் தமது சட்டைக் கைகளை முழங்கை

93