பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்களில் பயத்தைக் காட்டிலும் பகைமையே அதிகமாகக் குடிகொண்டிருந்தது. லான்ஸ் கார்ப்போரல் ஃபிரிட்ஜ் பெர்க்மான்- அவர் சொல் வதை நாம் நம்புவதாக இருந்தால்.---சிவிலியன் மக்களுக்கு எதிரான எந்தத் தண்டனை நடவடிக்கைகளிலும் அவர் பங்கெடுத் ததே கிடையாது. அநாவசியமான கொடுமைகளுக்கெல்லாம் இயல்பாகவே எதிரானவரான பண்பும் கண்ணியமும் மிக்க நபராகவே அவர் தம்மைப்பற்றிக் கருதிக் கொண்டிருந்தார். எனவே, குடிவெறி ஏறிய அவரது போர்வீரர்கள் ஆபாசமான ஜோக்குகளைக் கூறிச் சிரித்துக் கொண்டு, ஓர் இளம் விவசாய மாதைத் தானியக் கிடங்குக்குள் இழுத்துச் சென்றபோது, அவர் அவளது கூக்குரலைக் காதில் கேட்காதிருப்பதற்காக, அந்த முற்றத்தை விட்டே அப்பால் சென்று விட்டார். அந்தப் பெண் இளமையும் பலமும் மிக்கவளாக இருந்தாள். அவள் அவர்களை வலுவாக எதிர்த்துப் போராடினாள்; இதனால் அந்தப் போர் வீரர்களில் ஒருவனது கண் பறிபோய்விட்டது. என்றாலும், மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்து அவளை மடக்கி விட்டனர். அவர்கள் அவளைக் கற்பழித்து முடித்த பின்னால், அந்த ஒற்றைக் கண் போர் வீரன் அவளைக் கொன்று விட்டான். இதைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, லான்ஸ் கார்ப்போரல் பெர்க்மான் படுகோபம் கொண்டார். அவராக இருந்தால், இத்தனை நீசத் தனமான காரியத்தை அவர் செய்திருக்கவே மாட்டார். அவருக்கு அவரது சொந்த ஊரான நூரெம்பர்க்கில், மனைவியும் இருகுழந்தைகளும் இருந்தனர். எனவே தமது மனைவிக்கு இந்த மாதிரி எதுவும் நேர்வதை அவர் விரும்பவே மாட்டார், போகட்டும். மிருகப் பிறவிகளின் செயல்களுக்கு அவரால் பதில் கூற முடியாது : துர்பாக்கிய வசமாக அத்தகைய பிறவிகளும் ரீச் ராணுவத்தில் இருக்கத்தான் செய்தார்கள். இந்தச் சம்பவத்தைக் குறித்து அவர் தமது லெப்டினென்டிடம் கூறியபோது, அந்த மனிதர் *போரென்றால் இப்படித்தான்!' என்று தோளை உலுக்கி விட்டு, 'அற்ப விஷயங்களுக்கெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டாம்' என்று பெர்க்மானிடம் கூறினார், அந்தப் படைப் பிரிவு வந்து சேர்ந்தவுடனேயே நேராகப் போரில் ஈடுபட நேர்ந்தது. அவர்கள் பதுங்கு குழிகளை விட்டு 26 நாட்களுக்கு வெளி வரவில்லை. 170 பேர் கொண்ட பெர்க் மானின் கம்பெனியில் 38 பேரே உயிர் பிழைத்திருந்தனர், இத்தகைய பேரிழப்பைக் கண்டு போர்வீரர்கள் சோர்வடைந்

தனர். அவர்கள் தமது பாடல்களை உரக்கப்பாடிக் கொண்டு

95