பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்சியின் உறுப்பினனாவான், அவன் பிரான்சிலும், யூகோஸ்லாவி யாவிலும், கிரீஸிலும் போர் புரிந்திருந்தான், கையால் எறியும் வெடிகுண்டுகள் பலவற்றை மொத்தமாக வீசி, ஒரு சோவியத் போர்வீரர் அன்று அவனது டாங்கியைத் தகர்த்தெறிந்து விட்டார். அவன் டாங்கியிலிருந்து வெளியே குதித்து இறங்கித் திருப்பிச் சுட்டான். நான்கு சோவியத் தோட்டாக்கள் அவனைத் தாக்கி விட்டன; என்றாலும் காயங்கள் படுமோசமாக இல்லை. இடையிடையே அவன் வலியினால் துடித்தான்; எனினும், மொத்தத்தில் அவன் துணிவுமிக்கவன் போல் வெளிக்குக் காட்டிக் கொண்டு அகந்தையோடு நடந்து கொண்டான். அவன் எங்கள் கேள்விகளுக்குக் கண்களை நிமிர்த்திப் பார்க்காமலே பதிலளித்தான். சில கேள்விகளுக்குப் பதிலளிக்க அவன் அடியோடு மறுத்து விட்டான்; எனினும் பின்னர் அவன் ஜெர்மன் தேசத்தின் மேலாண்மையைப் பற்றியும், பிரெஞ்சு, பிரிட்டிஷ், மற்றும் ஸ்லாவ் இனத்தவரின் கீழான தன்மையைப் பற்றியும் நன்கு மனப்பாடம் செய்திருந்த வாக்கியங்களை மிகவும் உற்சாகத்தோடு வாய்விட்டுக் கூறினான். இல்லை. எங்கள் முன் பேசிக் கொண்டிருந்தது ஒரு மனிதப் பிறவி அல்ல; நாற்ற மெடுக்கும் மசாலாவைத் தன்னுட் பொதிந்த வேகாத பலகாரம் தான் அவன். அவனுடைய சொந்தக் கருத்து என்று சொல்லிக் கொள்ள ஒரு கருத்து கிடையாது; ஆன்மிக நலன்கள் எதையும் பற்றிய அக்கறையும் அவனுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. புஷ்கினைப் பற்றியும், ஷேக்ஸ்பியரைப் பற்றியும் அவனுக்குத் தெரியுமா என்று நாங்கள் அவனிடம் கேட்டோம். அவன் ஏதோ சிந்தித்தவனாகத் தனது நெற்றியைச் சுருக்கினான். யார் அவர்கள்?” என்று கேட்டான் அவன், அவர்கள் யார் என்று நாங்கள் அவனிடம் சொல்லியதும், அவன் ஏளனத்தோடு உதட்டைப் பிதுக்கி இளித்த வாறு இவ்வாறு பதிலளித்தான்: அவர்களை எனக்குத் தெரியாது; அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் நான் விரும்பவில்லை. அவர்கள் எனக்குத் தேவையும் இல்லை. போரில் ஜெர்மனி தான் ஜெயிக்கும் என்றும் அவன் நிச்சய' மாகக் கருதினான் , அசட்டுத்தனமான, முட்டாள்தனமான பிடிவாதத்தோடு அவன் திரும்பவும் இவ்வாறு கூறினான்: 1 'மாரிப் பருவத்துக்கு முன்னால் எங்கள் ராணுவம் உங்கள் கதையை முடித்துவிடும். பின்னர் அது தனது வ விமை முழுவதோடும் இங்கிலாந்தின் மீது பாயும். இங்கிலாந்து அழியத்

தான் வேண்டும்.

99