பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படலம் படர்ந்திருந்தது. பதுங்கு குழிகளில் இருந்தபோது அவர்களது தலைகளில் பேன்கள் பற்றிக்கொண்டு விட்டன; எனவே அவர்கள் கூச்சமே இல்லாமல் தமது அழுக்கடைந்த விரல்களால் தலையைச் சொறிந்து கொண்டார்கள். அந்த ஆறு பேரில், அழகிய கருநிற வாலிபனாகவிருந்த - ஒருவன் மட்டுமே மகிழ்ச்சியோடு புன்னகை புரிந்தான்; அவன் என் பக்கம் திரும்பி இவ்வாறு கூறினான்: என்னைப் பொறுத்தவரையில் யுத்தம் நல்லபடியாக முடிந்து விட்டது. என்னைக் கைதியாகப் பிடித்ததும் என் அதிருஷ்டம்தான் என்று எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆவி பறக்கும் முட்டைக்கோஸ் சூப் நிரம்பிய மெஸ்- டின்கள் கொண்டு வரப்பட்டன, அந்தக் கைதிகள் பசியெடுத்த மிருகங்களைப்போல் உணவின் மீது பாய்ந்தார்கள்; இறைச்சியைக் கூடக் கடித்துச் சமைத்துத் தின்னாமல், தனது வா!) பல்லாம் வெந்துபோகும் வண்ணம் அந்த சூப்டை ஆசையோடு ஓசை யெழும்பச் சப்பிக் குடித்து அதனை உள்ளே விழுங்கினார்கள். இரண்டு கரண்டிகள் குறைவாக இருந்தன. ஆனால் கரண்டிகள் வரும் வரை காத்துக் கொண்டிராமல், இரண்டு ஜெர்மானியர்கள் தமது அழுக்கடைந்த கைகளினாலேயே அந்த மெஸ்-டின் களுக்குள் துழாவி, அதிலிருந்த முட்டைக் கோஸையும் உருளைக் கிழங்குகளையும் வெளியே எடுத்தார்கள்; அந்த உணவைத் தமது வாய்களுக்குள் திணித்தார்கள்; பிறகு தமது தலைகளைப் பின்னோக்கிச் சாய்த்தவாறு, ஆனந்த பரவசத்தால் கண்களை ஏறச் சொருகினார்கள். தமது பசி ஆறிய பின்னர், அவர்கள் தூக்கத்தையும் பாரத்தையும் உணர்ந்தவர்களாய் தமது இடத்தைவிட்டு எழுந்தார்கள், நன்றி என்று ஒரு கட்டுமஸ்தான லான்ஸ் கார்ப்போரல் பொங்கிவந்த ஏப்பத்தை உள்ளடக்கியவாறே கூறினான்:

  • மிகவும் நன்றி. இத்தகைய நிறைவான உணவை நாங்கள்

கடைசியாக எப்போது உண்டோம் என்பது கூட எனக்கு ) நினைவில்லை . ஏழாவது கைதி உண்பதற்கே , மறுத்தவாறு கூடாரத்தி . லேயே இருந்து வருவதாக மொழிபெயர்ப்பாளர் எங்களிடம் கூறினார். நாங்கள் கூடாரத்துக்குள் சென்றோம். நாங்கள் உள்ளே புகுந்ததும் நெடுநாளாகச் சவரம் செய்யாத முகமும், மிகவும் எலும்பும், தோலுமான உடம்பும் கொண்ட ஒரு மத்திய வயதான ஜெர்மன் போர்வீரன் எழுந்து நின்றான்; தனது"

மரத்துப் போயிருந்த பெரிய கரங்களைத் தனது உடம்பின் பக்க:

101