பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாட்டி) தொங்கவிட்டான். அவன் ஏஜ் சாப்பிட மறுக்கிறான் என்று அவனிடம் நாங்கள் கேட்டோம். பதைபதைப்போடு நடுங்கும் குரலில் அவன் இவ்வாறு பதிலளித்தான்: 6 * நான் ஒரு விவசாயி, ஜூலை மாதத்தில் என்னை ராணுவத்தில் சேர்த்துவிட்டார்கள். இந்த இரண்டு மாத காலப் போரின்போது, எங்களது ராணுவம் இழைத்த .டுநாசத்தில் நான் பார்க்கவேண்டியதையெல்லாம் பார்த்து - விட்டேன்; கைவிடப்பட்ட வயல்களையும் நான் கண்டுள்ளேன்; இவை 4.fx வற்றையும் நாங்கள் கிழக்கு நோக்கி முன்னே றிய போது தான் புரிந்தோம்.... எனக்குத் தூக்கமே போய்விட்டது; என்னால் உண்ணவே முடியவில்லை. அநேகமாக ஐரோப்பா முழுவதுமே இவ்வாறுதான் நாசமாக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவேன்; எல்லாவற்றுக்கும் ஹிட்லர் பயங்கரமான விதத்தில் பிரதிபலனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை யும் தான் அறிவேன். அந்த நாசமாய்ப்போன கீழ்மகனான ஹிட்லர் மட்டுமல்லாமல், ஜெர்மன் தேசம் முழுவதுமே இதற், கான பிரதிபலனை அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கும். நான் கூறுவதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?” அவன் முகத்தை அப்பால் திருப்பிக்கொண்டு, நெடுநேரம் மெளனமாக இருந்தான். நல்லது, இது ஒரு வரவேற்கத் தக்க சிந்தனையோட்டம்தான், ஜெர்மன் போர் வீரர்கள் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரமாகத் தமது பொறுப்பின், தவிர்க்கொணாத விதத்தில் தாம் அனுபவிக்கவேண்டிய பிரதி பலனின் முழுப்பாரத்தையும் உணர்கிறார்களோ, அவ்வளவுக் கவ்வளவு சீக்கிரமாக வெறிபிடித்துப் போய்விட்ட நாஜிசத்தின் மீது ஜனநாயகமும் வெற்றி பெறும், 1941 லெனின்கிராடு வாசிகளுக்கு ஒரு கடிதம் எனது லெனின்கிராடுத் தோழர்களே! எதிரி சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில், வாழ்வதும், உழைப்பதும், போராடுவதும் உங்களுக்கு எத்தனை சிரமமயமானதாக இருக்கும் என்பதை நான் அறிவேன். மக்கள் எங்கணும் ஒவ்வொரு போர் முனையிலும், பின்ன ணி யிலும் உங்களை நினைவில் வைத்துள்ளனர். தூரதொலைவி லுள்ள யூரல் ஸில்' உருகி வழிந்தோடும் உலோகப் பிரவாகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் உருக்குத் தொழி

லா ஒளி உங்களைப்பற்றி நினைத்துப் பார்க்கிறார்; உங்களது விடுதலை

102