பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்டில் அமைதி நிலவிய இடைவேளைகளின்போது, தமது மெல்லிய ரீங்காரத்தோடு கொசுக்கள் பாடுவதையும், அருகிலிருந்த சிறு குட்டையில் திடுக்கிட்டுப் போன தவளைகள் பயந்து போய் ஒன்றையொன்று அழைக்கும் சத்தத்தையும் நாங்கள் கேட்க முடிந்தது. நாங்கள் ஒரு காட்டுச் செடிப் புதருக்கடியில் படுத்திருந் தோம். லெப்டினென்ட் கெராசிமோவ் மிகவும் சாவதானமாக வும், தொல்லை கொடுத்து வந்த கொசுக்களை ஒடிந்துபோன ஒரு மரச் சுள்ளியால் விரட்டிக் கொண்டும் தம்மைப் பற்றி என்னிடம் கூறினார். அவர் கூறிய கதையை நான் மனப்பாடமே செய்ய முடிந்து விட்டதால், அவர் கூறியபடி அதனை அப்படியே தருகிறேன்.

  • 'போருக்கு முன்னால் நான் மேற்கு சைபீரியாவில் ஒரு

தொழிற்சாலையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தேன். சென்ற ஆண்டு ஜூலை 9-ஆம் தேதியன்று படையில் சேர்க்கப் பட்டேன். என் குடும்பத்தில் என் மனைவியும், இரண்டு பிள்ளை களும், உடம்புக்கு முடியாத என் தந்தையும் உள்ளனர். ஆம். அவர்கள் என்னை வழியனுப்பி வைக்கும்போது என் மனைவி அழத்தான் செய்தாள்; 'உங்கள் பலத்தையெல்லாம் கொண்டு நாட்டையும் எங்களையும் பாதுகாத்து நில்லுங்கள். அவசிய மா னால் உங்கள் உயிரையும் கொடுங்கள்; ஆனால் வெற்றி மட்டும் நமதாகுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்' என்று பிரியாவிடை டாக என்னிடம் கூறினாள், எனக்கு நினைவிருக்கிறது. நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்; “உன்னைப்பற்றி நீ என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ என்ன மனைவியா அல்லது குடும்ப அரசியல் போ தகரா? எனக்குப் போதுமான வயதாகி விட்டது. வெற்றியைப் பொறுத்தவரையில், அதைப்பற்றி நீ என்றுமே கவலைப்பட வேண்டாம், ஜெர்மானியர்களின் தொண்டைக் குழி, உணவுக்குழாய் எல்லாவற்றையும் நாங்கள் கிழித்தெறிய வேண்டியிருந்தாலும், வெற்றியை நாங்கள் பெற்றே தீருவோம்' என்று நான் கூறினேன். என் தந்தை திடசித்தம் படைத்தவர்தான்; அவர் அழ வில்லை; ஆயினும் அவர் எனக்கு அறிவுரை கூறவேண்டுமெனக் கருதினர். “ஞாபகம் வைத்துக் கொள், விக்தர், கெராசிமோவ் என்ற பெயர் வெறும் பெயர் மட்டும் அல்ல. நீ பரம்பரை பரம்பரையாக வந்த ஆலைத் தொழிலாளியாவாய், உன் முப்பாட்டனார் ஸ்த்ரோகனோவ்* குடும்பத் தொழிலாளர்களில்

  • ஸ்த்ரோகனோங் குடும்பத்தினர் 17ஆம் நூற்றாண்டு முதல் வாழ்ந்து வந்த,

யூரல்ஸைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் ஆவர். .

107