பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவராவார். நமது குடும்ப வரலாறும் அத்தனை பழமையானது. தமது குடும்பம் பல நூற்றாண்டுகளாக ரஷ்யாவுக்கு இருட்பை 2.ற்பத்தி செய்து வந்துள்ளது. இந்தப் போரில் நீராம் இரும்பைப் போல் பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும். அரசு--நினைவில் வைத்துக் கொள், உனது அரசு, - உன்னைப் போர் வரும் வரை யிலும் ஒரு ரிசர்வ் அதிகாரியாகத்தான் வைத்திருந்தது; இப் போது நீ எதிரிக்குச் சரியான அடி கொடுக்க வேண்டும் தெரிகிறதா? என்று அவர் என்னிடம் கூறினார். அவ்வாறே செய்கிறேன்' என்று நானும் கூறினேன். ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்லும் வழியில், நான் வட்டாரக் கட்சிக் கமிட்டி அலுவலகத்துக்குச் சென்றேன். எங்கள் செயலாளர் பேச ஆரம்பித்தால் லேசில் விடமால்.. டார். என் புனைவியும், தந்தையும் எனக்கு விடைதரும்போது அவரவர் உபதேசத்தைக் கூறினார்கள் என்றால், இவரும் நிச்சயம் ஒரு நீண்ட, பிரசங்கத்தையே செய்ய விரும்புவார் என்று நான் நினைத்தேன். ஆனால் என் கணிப்டெல்லாம் தவறாகி விட்டது! “உட்காருங்கள், கெராசிமோவ்' என்று என்னைப் பார்த்துக் கூறினார் அவர்: 'நமது பழைய நல்ல வழக்கப்படி, நீங்கள் புறப் படுவதற்குமுன் ஒரு நிமிடம் உட்காருங்கள்' என்றார். நாங்கள் எதுவும் பேசாமல் ஓரிரு நிமிடங்கள் உட்கார்ந்திருந்தோம். பிறகு அவர் எழுந்தார்; நான் அவரது மூக்குக் கண்ணாடியில் ஏதோ பனிமூட்டம் படிந்திருப்பதைக் கவனித்தேன். நல்லது, நல்லது, நமது மக்களுக்கு என்னதான் நேர்ந்து விட்டது என்று என்னுள் கூறிக் கொண்டேன். இதன்பின் செயலாளர் இவ்வாறு கூறினார் ; *எல்லாமே தெ ளிவான விஷயம். அதிக ' ' 156 ச் கூறு வதற்கு ஒன்றுமில்லை. தோழர் கெராசிமோவ், நீங்கள் ஒரு சிவப்பு இளம் பயோனீர் டையைக் கழுத்தில் கட்டி, தொங்கும் சாதுபலடத்த சிறுவ னாக இருந்தது எனக்கு நினைவிருக்கிறது; நீங்கள் காம்சொமாலின் உறுப்பினராக இருந்ததும் எனக்கு நினைவிருக்கிறது; உங்களைப் பத்தாண்டுக் காலமாகக் கம்யூனிஸ் டாகவும் அறிந்திருக்கிறேன். நீங்கள் போய் அந்த வேசி மக்களை ஈவிரக்ச மற்றுக் கொல்லுங்கள். கட்சி ஸ்தாபனம் உங்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறது. செயலாளர் என்னைக் கட்டியணைத்தார். மரபுக்கேற்ப நாங்கள் முத்தமிட்டுக் கொண்டோம். அவர் ஓர் உணர்ச்சியற்ற மரக்கட்டையாக எனக்கு இனியும் தோன்றவில்லை. அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தபோது நான் உண்மையிலேயே பெருமித உணர்வை உணரும் அளவுக்கு அவரது உளமார்ந்த அன்பு இதயத்துக்கு

அத்தனை இதமாக இருந்தது.

108