பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபிவிருத்தி செய்வதிலும் மிகவும் பயன்மிக்கதாக விளங்கிய தமது பயணங்களைப் போன்ற மற்றொரு 2.4!ணத்துக்கு ஷோவ கோவ் திட்டமிட்டுள்ளாரா என்று கேட்டு, வெளிநாடுகளிலுள்ள பதிப்பாளர்களிடமிருந்தும், ' ஸ்தாபனங்களிடமிருந்தும் கடிதங் களும், தந்திகளும் வருகின்றன, சர்வதேச அரங்கில் நாங்கள் டோக்கியோவை விட்டு வெகுதூரம் வந்து - விட்டோம்; மலைப் பிரதேசமான நிக்கோவை நோக்கிச் சுட்டெரிக்கும் வெயிலில் காரை ஓட்டிச் சென்றோம். நாங்கள் இன்னும் பல மைல்கள் கடக்க வேண்டியிருந்தது; எங்களுக்கு மிகவும் தாகமாகவும் இருந்தது. இறு. நகரமொன்றின் பிரதா!'னச் சதுக்கத்தின் வழியாக நாங்கள் காரை ஓட்டிச் சென்றபோது, அதன் ஒருபுறத்தில் {ஞாபகார்த்தப் பொருள்களை விற்கும் கடை களும் மற்றும் சிகரெட்டு களையும், குளிர்பானங்களையும் விற்கும் பெட்டிக் கடைகளும் இடையறாது வரிசையாக அமைந்திருப் பனதக் கண்டோம். நாங்கள் எங்கள் பயன் 3) தச் சில நிமிட நேரம் நிறுத்திக் கொள்ளத் தீர்மானித்தோம். - மிகவும் பல்வகைப்பட்ட ஞாபகார்த்தப் பொருள்களைப் படைக்கும் திறமையும், சுறுசுறுப்பும் மிக்க உள் ளூர் ஜப்பானியக் கைவினைஞர்கள் உருவாக்கிய பொருள்களை அந்தக் கடைகள் விற்றுக் கொண்டிருந்தன. நாங்கள் சந்தர்ப்பவசமாகத் தங்கி நிற்க நேர்ந்த அந்த இனந்தெரியாத நகரில், என்ன ஞாபகார்த் தப் பொருளை வாங்கலாம் என்று யோசித்து நாங்கள் அந்த சீர் கடைகளின் ஒன்றில் நின்று கொண்டிருந்தபோது, விற்பனை செய்யும், இளம் புபதி ஒருத்தி தாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று மொழி பெயர்ப்பாளரிடம் கேட்டாள், நாங்கள் சோவியத் யூனியனிலிருந்து வந்திருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்ட வுடன், எங்களோடு எழுத்தாளர் ஷோலகோவும் வந்திருக் கிறாரா என்று அவள் கேட்டாள். அவர் ஜப்பானில் சுற்றுப் பயணம் செய்து வருவதாகப் பத்திரிகைகள் அறிவித்திருந்தன. ஷோவதோவ் எங்கிருக்கிறார்? அவரை அவள் எப்படிக் காரண முடியும்:? ஷோலகோவ் எங்களுடன்தான் இருக்கிறார் என்பதை மொழிபெயர்ப்பாளர் அவளிடம் கூறியவுடன், விற்பனை செய்யும் பெண்கள் யாவரும் சிறிது நேரம் திடீரென்று கண் மறைந்து - போய் விட்டனர்; பின்னர் அவர்கள் ஷோலகோவின் நூல் தொகுதிகளையும் ஆட்டோகிராப் நோட்டுப் புத்தகங்களையும் கைநிறையச் சுமந்து கொண்டு திரும்பவும் வந்து சேர்ந்தனர்.

ஷோகோவ் சிகரெட்டுகள் ' வாங்கிக் கொண்டிருந்தார்.

2