பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமாம், நான் கீழே கிடந்தவாறு சாகவே விரும்பவில்லை. புரிகிறதா உங்களுக்கு? நான் என்னிடம் மிஞ்சியிருந்த சக்தியையெல்லாம் திரட்டி, கைகளையும் கால்களையும் உன் றி எழுந்து நிற்க அரும்பாடு பட்டேன். ஜெர்மானியர்கள் என் அருகில் வந்துவிட்ட சமயத்தில் நான் ஏற்கெனவே எழுந்து நின்று விட்டேன். நான் நின்றேன்; என்றாலும் தள்ளாடினேன். நான் திடீரென்று மயங்கிக் கீழே விழுந்து விடுவேன்" என்றும், அவர்களும் நான் கீழே விழுந்து கிடக்கும்போது என்னைக் குத்திக் கொன்று விடுவார்கள் என்றும் நான் மிகவும் பயந்தேன். அவர்களில் ஒருவர் முகம்கூட எனக்கு நினைவில்லை.

  • வாருங்கள்; என்னைக் கொல்லுங்கள், வேசி மக்களே! நான்

கீழே விழுவதற்கு முன் என்னைக் கொல்லுங்கள்' என்று அவர் களிடம் கூறினேன். அவர்களில் ஒருவன் தனது துப்பாக்கியின், மட்டையினால் என் கழுத்தின் மீது அடித்தான்; நான் கீழே சாய் ந்தேன்; எனினும் மீண்டும் எழுந்து நின்றேன். அவர்கள் கடகடவென்று சிரித்தார்கள். அவர்களில் ஒருவன் என்னை நடக்குமாறு உத்தரவிட்டுத் தனது கையை அசைத்தான், நான் நடந்தேன். என் முகம் முழுவதிலும் காய்ந்து போன ரத்தம் பெருக்கோடியிருந்தது; தலையிலுள்ள காயத்திலிருந்து மிகவும் கதகதப்பான, பிசுபிசுப்பான ரத்தம் சொட்டியது, என் தோள் பயங்கரமாக வலித்தது; எனது வலது கையை என் னால் தூக்கவே முடியவில்லை. தரைமீது படுத்துக் கிடக்க வேண்டும் என்று எத்தனை பரிதாபகரமாக நான் விரும்பினேன் என்பது எனக்கு - நினைவிருக்கிறது. நான் எங்கும் போக விரும்பவில்லை; என்றாலும் நான் போகத்தான் செய்தேன்...., "இல்லை, நான் சாகவே விரும்பவில்லை; அதைக் காட்டிலும் கைதியாக்கப்பட்டுச் சிறையில் இருக்க நேர்வதை விரும்பவே இல்லை. எனது கிறக்கத்தையும், குமட்டலையும் நான் போராடி வெற்றி கண்டவாறே நடந்தேன். நான் உயிரோடு இருந்தேன், எனவே எனக்கு இன்னும் செயல்படும் திறன் இருந்தது என்பதே இதற்கு அர்த்தமாகும். கடவுளே! எனக்குத்தான் எவ்வளவு தாகமாக இருந்தது! என் வாய் காய்ந்து வறண்டு போயிருந்தது; எந்நேரமும் என் கண் முன்னால் ஒரு கறுப்புத் திரை' அசைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது. நான் ஏறத்தாழப் பிரக்ஞை இழந்தவனாகத்தான் இருந்தேன், என்றாலும், தான் நடந்தேன்; “ எனக்குக் கொஞ்சம் தண்ணீரும் சற்று ஓய்வும் கிடைத்தவுடனேயே நான் ஓடிப் போய் விடுவேன்' என்று எனக்குள் எந்நேரமும் சொல்லிக் கொண்ட

வாறே நடந்தேன்,

116