பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மற்றவர்களோடு சேர்ந்து செல்வதே எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. என்றாலும், எனது கட்சிக் கார்டு பத்திரமாக இருக்கிறது என்பதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்; அந்த மகிழ்ச்சியில் நான் எவ்வளவு தாகமாக இருந்தேன் என்பதையும்கூட மறந்து விட்டேன். “் நாங்கள் அனைவரும் மேற்கு நோக்கி நடத்திச் செல்லப் பட்டோம். ரோட்டின் இரு பக்கத்திலும் எங்களுக்குப் பலத்த - காவல் இருந்தது; சுமார் பத்துப்பேர் மோட்டார் சைக்கிள் களில் காவலாக வந்தனர். நாங்கள் விரைவாக நடந்து செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டோம்; எனது பலமோ துரித மாகக் குன்றி வந்தது. நான் இரண்டு முறை கீழே விழுந்தேன் ; எனினும் எழுந்து நின்று மேலும் நடந்து சென்றேன்; ஏனெனில், நான் தரையிலேயே மேலும் ஒரு நிமிடம் இருந்தால், அதனால் எங்கள் வரிசை என்னைக் கடந்து முன்னே சென்றுவிட்டால், அங்கேயே, ரோட்டின்மீதே என்னைச் சுட்டுத் தள்ளி விடுவார் கள் என்பதை நான் அறிந்திருந்தேன். வரிசையில் எனக்கு முன்னால் சென்ற சார்ஜெண்ட் விஷயத்தில் இப்படித்தான் நிகழ்ந்தது. அவருக்கு ஒரு காலில் காயம் பட்டிருந்தது; அவரால் நடக்கவே முடியவில்லை, அவர் முனகினார்; வேதனை" சகிக்க முடியாததாக இருந்தபோது அவர் வாய்விட்டுக் கதறவும் கூடச் செய்தார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு அவர் உரத்த குரலில் இவ்வாறு கூறினார்: “முடியாது. இனிமேலும் என் னால் நடக்க முடியாது. விடைபெறுகிறேன், தோழர்களே!' இதன் பின் அவர் ரோட்டின் மத்தியில் வெறுமனே உட்கார்ந்து விட்டார். நடையை நிறுத்தாமல், மற்றவர் கள் அவரைத் தூக்கியெடுத்து அவரை நிற்கச் செய்ய முயன்று ரபர்த்தனர். ஆனால் அவரோ மீண்டும் தரைமீதே சரிந்து விழுந்தார், அவரது மிகவும் வெளிறிப் போன இளம் முகத்தை யும், சுளித்துச் சுருங்கி ஒன்று சேர்ந்திருந்த புருவங்களையும், கண்ணீர் நிரம்பி நின்ற கண்களையும் இப்போதும்கூட. நான் ஒரு கனவில் காண்பது போலக் காண முடிகிறது. வரிசை அவரைத் தாண்டிச் சென்றது. நான் திரும்பிப் பார்த்தேன், மோட்டார் சைக்கிளில் காவலாக வந்த ஒருவன் அந்த சார்ஜெண்டுக்கு அருகில் வண்டியை ஓட்டிச் சென்றான்: உறையிலிருந்து கைத்துப்பாக்கியை வெளியே எடுத்தான்; அதனை அந்த மனிதரின் காதில் இடித்து அவரைச் சுட்டுத் தள்ளினான். இவ்வாறு செய்வதற்கு அவன் சைக்கிளை விட்டுக் கூட இறங்கவில்லை, தெரியுமா? நாங்கள் ஆற்றங்கரைக்கு -

வந்து சேர்வதற்கு முன், ஜெர்மானியர்கள் மேலும் பல

118