பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவு! தற்கு முன்பே குளிர்காலம் வந்துவிட்டது ; மழை இடை விடாது கொட்டியது; அதி காலையில் தரையில் உறைபனி படிந் திருந்தது. வாழ்க்கை சற்றேனும் குறையாத துன்பமா கவே இருந்தது. இறந்து போனவர்களில் ஒருவரின் சட்டையையும் கம்பளிக்கோட்டையும் பெறும் அளவுக்கு நான் அதிருஷ்டசாலி பாகவே இருந்தேன். என்றாலும்கூட, என் எலும்புகளை உ. றைய வைக்கும் குளிரிலிருந்து நான் தப்பிக்க முடியவில்லை. பசியைப் பொறுத்தவரையில், நாங்கள் அதற்கு ஏற்கெனவே பழகிப் போய்விட்டோம்....... “கொள்ளையடித்ததன் மூலம் கொழுத்துப் போயிருந்த போர் வீரர்களே எங்களுக்குக் காவலாக இருந்தனர். கு ணத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் எல்லோருமே , ஒரே வார்ப்பில் வார்த்தெடுக்கப்பட்டவர்களாக இருந்தனர், அ வர்களில் ஒருவன் விடாமல் அத்தனைபேரும் முழுக்கமுழுக்க அயோக்கியர் களாகவே இருந்தனர். அவர்கள் வேடிக்கைக்காக என்ன செய்தார்கள் என்பதை இப்போது சொல்கிறேன்: காலையில் ஒரு லான்ஸ் கார்ப்போரல் முள்வேலியின் பக்கமாக வருவான் ; எங்களை உணவுக்காக வரிசையாக வந்து நிற்குமாறும், முகாமின் இடதுபுற மூலையின் கடைக்கோடியில் எங்களுக்கு உணவு வழங்கப்படும் என்றும் மொழிபெயர்ப்பாளன்? மூலமாக எங்களுக்குக் கூறுவான். “ நாங்கள் எல்லோரும், அதாவது இன்னும் தமது காலால் 'எழுந்து நிற்கக் கூடியவர்கள் எல்லோரும் அங்கு கும்பலாகக் கூடுவோம்; அங்கு நாங்கள் ஒரு மணி, இரண்டு மணி, மூன்று மணிநேரம்கூடக் காத்திருப்போம். கடுமையான வாடைக் காற்றில். நடுநடுங்கிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான உயிருள்ள எலும்புக் கூடுகளாக நாங்கள் நிற்போம்; காத்து நிற்போம். திடீரென்று காவலாளிகள் முற்றத்தின் ..றுகோடியில் தலை காட்டி, குதிரை-இறைச்சித் துண்டுகளை முள் வேலிக்கு மேலாகத் தூக்கி எறியத் தொடங்குவார்கள். பசியால் வாடிய கும் பல் "முழுவதும் அந்தப் பக்கமாகப் பாய்ந்து சென்று, மிருகங்களைப் போல் தமக்குள் சண்டை பிடித்துக் கொண்டு, அந்த அட்டுப் பிடித்த இறைச்சித் துண்டுகளைப் பொறுக்குவதற்காக அடிபிடிப் போரில் இறங்குவார்கள் ... காவலாளிகள் இந்தக் காட்சியைக் "கண்டு சிரித்து முழங்குவார்கள்; பின்னர் திடீரென்று எந்திரத் துப்பாக்கிகள் நெடுநேரம் சடசடவென்று குண்டுகளைப் பொழியத் தொடங்கும். கூட்டத்தினர் பீதியினால், இறந்தவர்

களையும், காயம்பட்டவர்களையும் தரையில் கிடக்க விட்டுவிட்டு,

124