பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடதுபுறம் நோக்கி ஓடுவர். இதன் பின் அந்த முகாமின் தலைமை வார்டனான உயரமான ஓபர்---லெயூட்னென்ட் முள்வேலிப் பக்கமாக வருவான்; பொங்கிவரும் சிரிப்பை அடக்க மாட்டாமல் அவன் எங்களை நோக்கி இவ்வாறு கூறுவான்:

  • உணவை வழங்கும்போது நீங்கள் நடந்துகொண்ட முறை

அதிர்ச்சி தரத்தக்கதாகும்! இது மாதிரி மீண்டும் நடந்தால், ரஷ்யப் பன்றிப் பிறவிகளான உங்களை நான் ஈவிரக்கமற்றுச் சுட்டுத் தள்ளுவேன். இறந்தவர்களையும், காயம்பட்டவர்களையும் அகற்றுங்கள். தமது தலைவனுக்குப் பின்னால் கும்பலாகக் கூடி நிற்கும் போர் வீரர்கள் உயிர்போகிற மாதிரி விலா வெடிக்கச் சிரித்தார்கள். அவர்கள் அவனைப் பெரிய புத்திசாலி என்று நினைத்துக்கொண்டனர்; இதெல்லாம் அவர்கள் மனத்துக்கு ஒரு வேடிக்கையாக இருந்தது. நாங்கள் இறந்து போனவர்களைத் தூக்கிச் சென்று , முகாமுக்கு அருகிலிருந்த பள்ளத்தில் புதைத்துவிட்டு வருவோம்... இந்த முகாமிலும் அடி கொடுப்பது வழக்கமான முறைகளில் ஒரு பகுதியாக இருந்தது. முஷ்டிகள், கம்புகள், துப்பாக்கி மட்டைகள் எல்லாமே இதற்குப் பயன்படுத்தப் பட்டன, காவலாளிகள் எங்களைக் காரணமில்லாமல் வெறுமனே : அடித்தார்கள்; ஏனெனில், அவர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு தூரம் சலித்துப் போயிருந்தது; எங்களை அடிப்பது அவர்களுக்கு ஒரு அருமையான, வேடிக்கையான மாற்றாக இருந்தது. என் காயங்கள் குணமாகியிருந்தன; எனினும், ஈரத்தினாலோ அல்லது பட்ட அடிகளினாலோ அவை மீண்டும் வாய்திறந்து, பயங்கரமான வேதனையை அளித்தன், என்றாலும் அப்போதும் நான் உயிர் வாழ்ந்தேன்; நம்பிக்கையை இழக்காதிருந்தேன்.... நாங்கள் தரையில், சேற்று மண்ணின் மீது படுத்துறங்கினோம், கீழே பரப்பி விரித்துக் கொள்வதற்கு எங்களுக்கு வைக்கோலைக் கூட அவர்கள் கொடுக்கவில்லை. நாங்கள் ஒருவ ரோடொருவர் நெருக்கமாகச் சுருண்டு படுத்துக் கொள்வோம், எங்கள் மனிதக் குவியல் இரவு முழுவதும் நிலைகொள்ளாமல் புரண்டும், உருண்டும், ஊர்ந்தும், சுருண்டும், நிலைகளை மாற்றிப் படுத்துக் கிடக்கும்; ஏனெனில், சேற்று மண்ணின்மீது படுத்துக் கிடந்த வர்கள் ஈரத்தால் எவ்வாறு விறைத்து அவதிப்பட்டார் களோ, அதேபோல் குவியலின் உச்சியில் படுத்துக் கிடந்தவர் களும், குளிரால் அவதிப்பட்டனர். அது தூக்கமே. அல்ல; ஒரே வேதனை,

  • * எனவே நாட்கள் ஒரு பேய்க் கனவைப்போல் நகர்ந்து

சென்றன. நான் மேலும் மேலும் பலவீனமடைந்து வந்தேன்..

125