பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களையும் கேட்டேன், இப்போது என்னைப் பிடிப்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல. “'பொழுது இருட்டிக் கொண்டே வந்தது. ஜெர்மானியர்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்துவிட்டால், நான். என்னிடம் மிருந்த தோட்டாக்களில் கடைசித் தோட்டாவைத் தவிர, ஏனையவை எல்லாவற்றையும் அவர்கள் மீதே பிரயோகித் திருப்பேன். கடைசித் தோட்டாவை எனக்காகப் பத்திரப் படுத்தியிருப்பேன், இந்த எண்ணம் எனக்கு ஊக்கத்தைத் தந்தது; நான் மிகுந்த எச்சரிக்கையோடு மேலும் முன்னேறிச் சென்றேன். " நான் அன்றிரவைக் காட்டில் கழித்தேன், சமீபத்திலேயே ஒரு கிராமம் இருப்பதைக் கண்டு கொண்டேன்; என்றாலும் நான் அங்கு செல்லவில்லை. அங்கு சென்று எதிரியிடம் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்ற பயம். 'கொரில்லாப் படைவீரர்கள் என்னை மறு நாள் கண்டெடுத்தார்கள். நான் இரண்டு வார காலம் அவர்களது நிலவறையில் படுக்கையில் கிடந்து கழித்தேன்; அப்போது நான் எனது இழந்த பலத்தையும் திரும்பப் பெற்று வந்தேன். நான் எனது கட்சிக் கார்டை.. அவர்களிடம் காட்டி ளேன் என்றபோதிலும், முதலில் அவர் கள் என்னை ஓரளவு சந்தேகத்துடன்தான் நடத்தினர்; நான் காவல் முகாமில் இருந்தபோதே, எனது கட்சிக் கார்டை, எனது கம்பளிக் கோட்டின் மடிப்புக்குள் வைத்துத் தைத்து மறைத்து வைத்திருக்க எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தேன். அவர்களது நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் அளவுக்கு எனக்கு உடல் தேறிய பிறகு, அவர்கள் ஏன்பால் காட்டி வந்த போக்கை முற்றிலும் மாற்றிக் கொண்டு விட்டனர். அங்கிருந்த போதுதான் நான் கொன்று தள்ளிய நாஜிகளுக்கும் நான் கவனமாகக் கணக்கு வைத்துக் கொள்ளத் தொடங்கினேன். அவர்களின் எண்ணிக்கை படிப்படியாக நூறை எட்டிக் கொண்டிருந்தது. பிப்ரவரி மாதத்தில் கொரில்லாப் படைவீரர்கள் என்னை முன்னணி எல்லைக்கு அப்பால் கூட்டிச் சென்றனர். நான் அங்கு சுமார் ஒரு மாதகாலம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். அங்குதான் எனது தோளில் புகுந்திருந்த குண்டுச் சிதறல் அகற்றப்பட்டது. பூதா மிலிருந்த போது எனக்கு ஏற்பட்ட வாத நோயும், மற்றும் என து . பிற நோய்களும், யுத்தத்துக்குப் பின்னரும் கூட இருந்துதான் வரும், என்னை ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே

அனுப்பியபோது, எனது சொந்த ஊருக்குச் சென்று உடம்பைத்

130