பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேற்றிக் கொள்ள என்னை அனுமதித்தனர். நான் அங்கு ஒரு வாரம்தான் இருந்தேன்; அதற்குமேல் என்னால் அங்கு இருக்க முடியவில்லை. நான் ராணுவத்தை நினைத்து ஏங்கினேன்; ஏனெனில் நீங்கள் என்ன தான் சொன்னாலும், முடிவுகாலம் வரும் வரையிலும் எனக்குரிய இடம் இதுதான்." நிலவறையின் வாசலில் நாங்கள் ஒருவருக்கொருவர் விடை பெற்றுக் கொண்டோம். சூரிய ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருந்த வெட்டவெளியை ஏதோ சிந்தனை வயப்பட்ட வராகக் கூர்ந்து நோக்கிய வண்ணம் லெப்டினென்ட் கெராசிமோவ் இவ்வாறு கூறினார்: நாம் சரியான முறையில் போராடக் கற்றுக் கொண்டுள் ளோம்; பகைக்கவும் அன்பு செலுத்தவும் கற்றுக் கொண்டுள் ளோம். எல்லா உணர்ச்சிகளையும் கூராக்குவதற்கு யுத்தம் ஓர் அற்புதமான உரை கல்லாகும். அன்பையும், பகைமையையும் அருகருகே வைப்பது சாத்தியமே அல்ல என்று ஒருவர் கருதக் கூடும். ஒரு மொட்டை வண்டிக் குதிரையையும் பயந்த சுபாவம் கொண்ட பெண் மானையும் ஒன்றாகச் சேர்த்து ஒரே வண்டியில் பூட்ட முடியாது எனக் கூறும் கதையை நீங்கள் அறிவீர்கள்.

  • " ஆனால், பாருங்கள், நாம் அதனைச் செய்து முடித்து

விட்டோம். இப்போது இரண்டும் சேர்ந்து நன்றாக இழுத்துச் செல்கின்றன. எனது நாட்டுக்கும் எனக்கும் நாஜிகள் இழைத்த கொடுமைக்காக நான் அவர்களைப் பகைக்கிறேன்; நான் என் நாட்டு மக்களை என் இதயமெல்லாம் நிறைய நேசிக்கிறேன்; நாஜிகளின் கீழ் அவர்கள் அவதிப்படுவதை நான் விரும்பவில்லை. அன்பு, பகைமை என்ற இந்த இரு உணர்ச்சிகளும் தான் என்னை -ஏன், சொல்லப்போனால் நம் எல்லோரையும்-இத்தனை மூர்க்க மான ஆவேசத்தோடு போரிடுமாறு நிர்ப்பந்திக்கின்றன. நாம் நமது நாட்டின்யாலுள்ள அன்பை: நமது இதயங்களில் சுமந்து கொண்டிருக்கிறோம்; நமது இதயங்கள் துடிக்கின்ற வரையிலும் அதுவும் அங்கே யே இருந்து வரும்; நமது பகைமையுணர்ச்சியை நாம் நமது துப்பாக்கிச் சனியன்களது முளை களின் மீதுதான் எப்போதும் சுமந்து செல்கிறோம். இந்தத் தடபுடலான வார்த்தைகளைப் பிரயோகித்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள்; என்றாலும், நான் உண்மையில் . இப்படித்தான் உணருகிறேன் என்று அவர் கூறி முடித்தார்; அவரை நான் அறிய வந்தபின் முதன்முறையாக அப்போதுதான் அவர் என்னை நோக்கி, ஒரு குழந்தையைப் போல் எளிமையும் இனிமையும்

மிக்கவிதத்தில் புன்னகை புரிந்தார்.

131