பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலும், எவ்வளவோ, துன்ப துயரங்களை அனுபவித் திருந்தும், ஓக் மரம் போல் இன்னும் வலிமை மிக்கவராக விளங்கிய அந்த முப்பத்திரண்டு வயது மனிதரின் நெற்றிப் பொருத்துக்களில் பனி வெள்ளை நிறமான நரைமயிர் மலிந் திருப்பதையும் அப்போதுதான் நான் முதன் முறையாகக் கவனித்தேன். எண்ணற்ற துன்பங்களாலும் வேதனையாலும் ஏற்பட்டிருந்த இந்த வெண்மையானது, அவரது பக்கவாட்டுத் தொப்பியோடு ஒட்டித் தொங்கிக் கொண்டிருந்த ஒரு நூலாம் படை, அவரது முடியைப் போய்த் தொட்டதுமே மறைந்து டோ ட்விட்ட அள வுக்கு நான் முயன்று முயன்று பார்த்தாலும் , அது என் கண்ணுக்குப் புலப்படாத அளவுக்கு, அத்தனை சுத்த மான வெள்ளையாக இருந்தது. 1942 அமெரிக்க நண்பர்களுக்கு ஒரு கடிதம் இந்தக் கொடூரமான, சிரமமான போரில் நாங்கள் திட்டத் தட்ட ஈராண்டுக் காலமாகப் போராடி வந்துள்ளோம். எதிரியின் முன்னேற்றத்தை நாங்கள் தடுத்து நிறுத்தி அவர்களைப் பின் வாங்கச் செய்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆயினும், இந்தப் போரின் காரணமாக, நாங்கள் ஒவ்வொரு வரும் அனுபவித்து வருந்தும் சிரமங்களைப்பற்றி நீங்கள் போதிய அs: 7வுக்குத் தெரிந்து கொள்ளாமலிருக்கலாம், எங்களது நண்பர்கள் அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். யுத்த நிருபர் என்ற முறையில் நான் தெற்கு, தென்மேற்கு, மேற்குப் போர் முனைகளில் இருந்திருக்கிறேன். தற்போது நான் அவர்கள் தமது நாட்டுக்காகப் போராடினார்கள் என்ற நாவலை எழுதி வருகிறேன்; அதில் தமது சுதந்திரத்துக்காகப் போராடி வரும் மக்களது போராட்டம் எவ்வளவு கடினமானது என்பதைப் புலப்படுத்த விரும்புகிறேன். அந்த நாவல் இன்னும் பூர்த்தி கடையவில்லை; எனவே நான் ஓர் எழுத்தாளன் என்ற முறையி லல்லாமல், வெறுமனே நேச நாடுகள் ஒன்றின் பிரஜை என்ற முறையில் உங்களிடம் பேச விரும்புகிறேன்.) 'ஒரு நாடு மற்றொரு நாட்டை முற்றிலும் துடைத்தெறியவும் அல்லது விழுங்கித் தீர்க்கவும் முனைபும் ஒரு முயற்சிக்குரிய அத்தனை கோரத்தோடும் யுத்தம் எங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புகுந்துள்ளது. போர் முனையில் நிகழ்ந்து வருபவை யாவும்,

ஒரு முழுமையான , போரில் நிகழ்பவை யாவும், எங்கள்

132