பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனைவரது வாழ்க்கையிலும் ஓர் அழிக்க முடியாத முத்திரையை ஏற்கெனவே பதித்துள்ளது. நான், எனது தாயை இழந்து விட்டேன்; எந்தவிதமான போர்த் தந்திர முக்கியத்துவமும் இல்லாத எங்கள் கிராமத்தின் மீது தொடுக்கப்பட்ட விமானத் தாக்குதலின் போது, ஒரு ஜெர்மன் விமானம் வீசிய குண்டினால் அவள் கொல்லப்பட்டுவிட்டாள். இந்த நடவடிக்கை கொள்ளைக் காரக் கும்பல்களுக்கே பொருத்தமான ஒரு நோக்கத்தையே கொண்டிருந்தது. அதாவது ஜெர்மன் ராணுவம் முன்னேறி வரும் நிலையில், மக்கள் தமது கன்றுகாலிகளைக் கிழக்கு நோக்கி ஓட்டிச் செல்ல முடியாதவாறு தடுக்கும் விதத்தில், அவர்களைச் சிதறவடிப்பதுதான் அந்த நோக்கமாகும். ஜெர்மன் குண்டுகள் எனது வீட்டையும், எனது நூலகத்தையும் நாசமாக்கியுள்ளன. நான் எழுத்தாளர்களும் சா கிராமவாசிகளுமான பல நண்பர்களை ஏற்கெனவே இழந்து விட்டேன்; அவர்கள் போர்முனையில் கொல்லப்பட்டனர். நெடுங்காலமாக நான் எனது குடும்பத் தோடு தொடர்பு கொள்ளாமலே இருந்து வந்தேன்; இந்தச் சமயத்தில் என் மகனும் நோய்வாய்ப் பட்டிருந்தான், அவர்களுக்கு நான் எந்த விதத்திலும் உதவ முடியவில்லை, ஆயினும், என்னதான் இருந்தாலும், இவை தனிப்பட்ட சிரமங்களே; சொந்தத் துயரங்களே; இதனையும். எங்களிற் பலரும் அறிவோம், இந்தத் துயரங்கள் யாவும், தமது வாழ்க்கையில் யுத்தம் புகும்போது மக்கள் அனுபவித்து வருந்த வேண்டிய ஒரு பொதுவான, நாடு தழுவிய பெருந்துயரை அதிகமாக்கி விடுகின்றன. எந்த எழுத்தாளரும் எந்தவொரு கலைஞரும் இதுவரையில் உலகுக்கு எடுத்துச் சொல்லிவிட இயலாததாகவுள்ள மக்களின் துன்ப துயரங்களை, எங்களது சொந்த, தனிப்பட்ட துயரங்கள் எங்களிடமிருந்து மூடிமறைத்து விட முடியாது. எங்களது நாட்டின் மிகப்பரந்த நிலப்பரப்புக்களையும், எங்களது மக்களில் பல்லாயிரக்கணக்கான பேர்களையும் எதிரி- வரலாறு இதற்குமுன் என்றுமே கண்டறியாத மிகமிகக் கொடூர மான எதிரி-கைப்பற்றியிருக்கிறான் என்பதை நீங்கள் நினைவு கூற வேண்டும், ஹன்களும், மங்கோலியர்களும், மற்றும் பிற காட்டுமிராண்டித் தன்மான இனத்தவர்களும் நடத்திய ரத்த பயங்கரமான படையெடுப்புக்களைப் பற்றிப் ' 4.ஸ்ரன்: t..ய வரலாறுகள் எங்களுக்குக் கூறுகின்றன. அவையனைத்தும் எங்களுக்கு எதிரான இந்தப் போரில் ஜெர்மன் நாஜி கள் இழைத்துள்ள வன்கொடுமைகளுக்கு முன்னால் மங்கிப்டோய்

விடுகின்றன. கிராமங்களும் வீடுகளும் தரைமட்டமாக்கப்

133