பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டுள்ளதை நான் என் கண்களாலேயே கண்டுள்ளேன்; அந்த வீடுகள் எனது நாட்டு மக்களுக்கு, எனது நூல்களில் வரும் கதாநாயகர்களுக்குச் சொந்தமா னவை; அனாதைகளை யும், குடியிருக்க வீடுகள் இல்லாமல் விடப்பட்ட மக்களையும் நான் கண்டிருக்கிறேன்'; படுகோரமாகச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கப்பட்ட உடல்களையும், உருக்குலைந்துபோன வாழ்க்கைக்கு உள்ளான ஆயிரக்கணக்கான பேர்களையும் நான் கண்டிருக்கிறேன். இவை யாவற்றையும் தமது வெறிபிடித்த தலைவனின் உத்தரவின் பேரில் ஹிட்லரின் படைகளே எங்கள் நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளன. : ஹிட்லரிசம் உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும்-உங்கள் நாடு, உங்கள் வீடு, உங்கள் வாழ்க்கை ஆகியவற்றுக்கும் கூட இதே கதியை ஏற்படுத்தவே தயாராகி வருகிறது. . நீங்கள் வருங்காலத்தை ஒரு விவேகமிக்க நோக்கோடு ஏறிட்டுப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், உங்களது நட்புறவான, தன்னலமற்ற உதவியை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். பொருள்களை உற்பத்தி செய்வ தோடும், முக்கியமாக அவற்றை எங்கள் நாட்டுக்கு வழங்குவ தோடும் சம்பந்தப்பட்ட உங்கள் முயற்சிகளின், உங்கள் சிரமங் களின் அளவை நாங்கள் அறிவோம்; அவற்றை நாங்கள் மதிக்கிறோம், எங்களது டான் ஸ்டெப்பி வெளிகளில் உங்களது டிரக் வண்டிகளை நான் கண்டிருக்கிறேன். எங்களது கிராமங் களின்மீது தாக்குதல் நடத்திய விமானங்களோடு உங்களது அற்புதமான விமானங்கள் போரிடுவதையும் நான்" கண்டிருக் கிறேன். எங்கள் நாட்டில் உங்களது நட்புறவான ஆதரவைப் பற்றி அறியாத நபர் ஒருவர்கூடக் கிடையாது. என்றாலும் நான் உங்களோடு மிக வும் பட்டவர்த்தன மாகவே பேச விரும்புகிறேன்; ஏனெனில் யுத்தம் எங்களுக்குப் பேசக் கற்றுக் கொடுத்துள்ளது. எங்கள் நாடும், எங்கள் மக்களும் இந்தப் போரில் படுபயங்கரமாகக் காயமடைந் துள்ளனர், இப்போதுதான் மோதல் மும்முரமடையத் தொடங் யுள்ளது. மேலும், நாங்கள் எங்களோடு எங்கள் நண்பர்களும் தோளோடு தோள் சேர்ந்து நின்று போரிடுவதைக் காண விரும்புகிறோம். போர் புரியவருமாறு நாங்கள் உங்களை அறை கூவி அழைக்கிறோம். நாங்கள் உங்களுக்கு நமது இரு நாடுகளின் நட்புறயை மட்டுமல்லாமல், போர் வீரர்களின் நட்புறவையும் வழங்குகிறோம். பிரதேச ரீதியிலான காரணங்களினால் நாம் உண்மை

யிலேயே தோளோடு தோள் சேர்ந்து நின்று போராட முடியா

134