பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டது . அந்த வாசகத்தை எங்களது போர் வீரர்களில் ஒருவர் தான் கொட்டை எழுத்தில் எழுதியிருந்தார்: எவ்வாறாயினும் நாங்கள் அங்கு போயே தீருவோம். அதன் கீழ் அவரது கையெழுத்தும் இருந்தது : செர்னோசோவ். ஒரு ரஷ்யப் போர்வீரர் எழுதிய இந்த எளிமையான வார்த்தைகள், உண்மையிலேயே மகோன்னதமான தன்னம் பிக்கையோடு ஒலிக்கவில்லையா? மேலும் இந்த ரஷ்யப் போர் வீரர்கள் பெர்லினுக்குப் போய்ச் சேரவும் செய்தார்கள்; அது மட்டுமல்ல, ஹிட்லரின் அந்தத் தலை நகரின் இடிபாடுகளின் கீழ், அவனது வெறி பிடித்த உலகாதிக்கக் கனவுகளையும் நிரந்தர மாகப் போட்டுப் புதைக்கவும் செய்தனர். நூற்றாண்டுகள் கடந்து செல்லும்; என்றாலும் எங்களது வீரஞ்செறிந்த செஞ்சேனையை மனிதகுலம் நன்றியுணர்வோடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்......... 1945 வெஷென்ஸ்காயா தொகுதி வாக்காளர்களுக்கு ஆற்றிய உரை தோழர்களே! சோவியத் யூனியனது சுப்ரீம் சோவியத்துக்கு என்னை உங்களது பிரதிநிதியாக நியமித்ததன் மூலம் நீங்கள் எனக்குச் செய்துள்ள மாபெரும் கெளரவத்துக்கும், நீங்கள் காட்டியுள்ள நம்பிக்கைக்கும் உங்களுக்கு நன்றி கூற அனுமதியுங்கள். எனது சொந்த ஸ்தானிக்ஸ் 7வின் மக்களான உங்கள் முன் தோன்றுவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் எல்லோரும் என்னை அறிவீர்கள்; நானும் உங்கள் ஒவ்வொருவரையும் மிக நன்றாக அறிவேன், எனவே என்னைப்பற்றி உங்களுக்குக் கூற வேண்டிய அவசியமே எனக்கு இல்லை. உங்களையும் என்னையும் - எதிர் நோக்கியுள்ள பணிகளைப் பற்றி மட்டும் நான் சில வார்த்தைகள் கூறுகிறேன்', போரால் விளைந்த நாசங்களை அதி விரைவில் சீர்ப்படுத்த வேண்டும் என்று சோவியத் அரசாங்கமும் நமது கட்சியும் நம்மைக் கோருகின்றன, பொருளாதாரப் புனர் வாழ்வுக்கு - நாம் நமது முயற்சிகளை ஈடுபடுத்தியாக வேண்டும், விவசாயத்தின் புனர்வாழ்வு நமது தாயகத்தின் ஆற்றல் வளத்தை அதிகரிக்கச் செய்யும், , . ஏனைய சோவியத் மக்கள் அனைவரோடும் சேர்ந்து நாம் சமாளிக்கவிருக்கும் பொதுவான பிரச்சினைகளைத் தவிர, நமது

வட்டாரத்தின் முன்னாள் கீர்த்தியையும் எழிலையும் மீட்க

136