பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டிய நமது சொந்தப் பணியும் நமக்கு உள்ளது . வெஷென்ஸ்கி வட்டாரத்தின் மீட்புப் பணிக்காக அரசாங்கம் ஏராளமான பணத்தை ஒதுக்கியுள்ளது; என்றாலும் நாம் நமது உள்ளூர்ச் சாத்தியப்பாடுகளையும் தலை சிறந்த முறையில் பயன் படுத்திக் கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்தாக வேண்டும், நாசமடைந்து விட்ட நமது வெ ஷென்ஸ்காயா ஸ் தானித்ஸாவை, போருக்கு முன் னால் அது இருந்ததைப் போல், எழில்மிக்க, நகரமயமான இடமாக, ஓரிரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றி உமைப்பதே நமது பணியாகும். ஒரு பிரதிநிதிக்கு அவர் ஆற்றவேண் டிய சிக்கலான கடமைகள் பல உள்ளன. ஒரு பிரதிநிதி தமது வாக்காளர்களின் வேண்டுகோள், முறையீடுகள் அனைத்தையும் கவனமாகக் காது கொடுத்துக் கேட்க வேண்டும். ஒரு பிரதிநிதி தமது சொந்தத் தொகுதியில் அரசாங்கத்தின் முடிவுகள் அமலாவதை ஆர்வத் தோடு கண்காணித்து வரும் செயலூக்கமிக்க செயல்வீரராக இருக்க வேண்டும். நான் உங்கள் நலன்க ளுக்குப் பாடுபட்ட உறுதி கூறுகிறேன், எனது பிர தானமான தொழில் எழுது வதுதான்; என்னைப் பற்றி நீங் கள் அவமானப்பட வேண்டிய அவசியமே இல்லாத விதத்தில், நான் இலக்கியத் துறையில் நல்ல பணியாற்றவும் உறுதி கூறுகிறேன் , 1946 தாயகத்தைப் பற்றி ஒரு வார்த்தை (என்ற கட்டுரையிலிருந்து) இது மாரிக்காலம். இரவு நேரம்..... எனது அன்பார்ந்த நாட்டவரே, நண்பரே, இந்த இரவின். தனிமையிலும் அமைதியிலும் உங்கள் கண்களை மூடுங்கள்; உங்கள் நினைவு உங்களை அண்மைக் கடந்த காலத்துக்குக் கொண்டு செல்லட்டும். அப்போது உங்கள் மனக் கண்ணைக் கொண்டு நீங்கள் இந்தக் காட்சிகளைக் காண்பீர்கள் : பைலோ ரஷ்யாவின் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள்; சுருங்கிப்போன மலைப் பூண்டுச் செடிகள் மண்டி வளர்ந்துள்ள, காலியான, நெடுங்காலத்துக்கு முன்பே கைவிடப்பட்ட நிலவறைகள்; துரு நிறம் படைத்த தண்ணீர் நிரம்பிச் சரிந்து கொண் டிருக்கும் பதுங்கு குழிகள் மற்றும் மறைவிடங்கள்;.

இவற்றுக்கடியில் கிடக்கும் களிம்பேறிப் போன துப்பாக்கித் ',

137