பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டாப் பெட்டிகளின் , மங்கிய பளபளப்பு; இவை யாவற்றுக்கும் மேலாகப் பயந்து பயந்து சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் குளிர்மிக்க வெண்பனி மூட்டம் ... ஸ்மோலென்ஸ்கி லும் மாஸ்கோவின் சுற்றுப்புறக் காட்டிலும் குண்டுச் சிதறல்களால் மேனியெங்கணும் வெட்டுண்டு நிற்கும் பைன் மரங்கள் உள்ளடங்கிய குரலில் அழுது புலம்புகின்றன; வேகமாக வீசும் வட, காற்றுக்கு முன்னால் தமது தலைகளைத் தாழ்த்தி வணங்குகின்றன, (லெனினது மரணமில்லா நகரத்தின் சுற்றுப்புறத்தின் மீது, நமது மக்கள் புனிதமானதாகப் போற்றும் இந்த நிலத்தின் மீது டோரினால் ஏற்பட்ட கொடிய வடுக்களை மூடி மறைக்கத் துடிப்பதுபோல், பஞ்சு போன்ற வெண்ணிறப் பனித்துகள்கள் துரிதமாக விழுகின்றன. . . எண்ணிறந்த குண்டு களால் திரும்பத் திரும்ப உழுது தள்ளப் பட்டதும், போரின் இடிமுழக்கத்தை இன்னும் நினைவில் வைத்துக் கொண்டிருப்பதுமான உக்ரேன் நாட்டின் புத்துயி ரூட்டப் பெற்ற வயல்களின் குறுக்கே சூரியனின் நிழல்கள் வழுக்கிச் செல்கின்றன . குர்ஸ்க், ஓரெல், வோரோனேஷ், துலா ஆகியவற்றை- பல்லாயிரக் கணக்கான டாங்கிகளின் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் பளுவின் கீழ் சிக்கி, முழுமையாக மூன்றாண்டுக் காலம் முனகிக் கொண்டிருந்த இந்தத் தொன்மையான ரஷ்யப் பிரதேசத்தைச் சுற்றிலும், சாய்வாக வீழும் கடுங்குளிர்மிக்க பனித் துகள்களைக் காற்று அடித்து வீசிக் கொண்டு செல்கிறது. உறைபனியினால் கருகிப்போன கடைசி இலைகள் மரங்களிலிருந்து உதிர்ந்து விழுந்து கிடக்கின்றன; சந்தேகமன்னியில் உலகிலேயே தலைசிறந்த நமது காலாட் படைகளின் எண்ணிறந்த, பொறுமை மிக்க பாதத் தடங்கள் பட்ட வயல்வெளிகள், நெடுஞ்சாலைகள், வண்டித் தடங்கள் ஆகிய எங்கணும் அந்த இலைகள் சிதறிக் கிடக்கின்றன. ஒவ்வோர் அங்குல நிலத்திலும் ஒரு காலத்தில் உயிரைக் குடிக்கும் உலோகமாக விளங்கிய குண்டிலிருந்து வெடித்துச் சிதறிய குண்டுச் சிதறல்கள் விதைகள் போல் புதையுண்டு கிடப் பதும், தேர்ந்தெடுத்து அனுப்பிய ஜெர்மன் ராணுவ டிவிஷன் களைச் சாம்பலாகவும் மண்ணாகவும் மாற்றியதுமான ஸ்டாலின் கிராடு நகரைச் சுற்றியுள்ள ஸ்டெப்பி வெளிகளில், வால்கா நதிப்பரப்பின் வழியாக : வீசிவரும் கோபாவேசமிக்க காற்று, அந்த ஸ்டெப்பி வெளியில் சிதறிக் கிடக்கும் ஜெர்மன் டாங்கிகள்

4 மற்றும் கார்களின் உருக்குலைந்து போன மிச்சம் மிஞ்சாடிகளைப்

138