பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போல் துருநிறம் பிடித்து அவலட்சணமாகத் தோன்றிய ஒரு காட்டுப் புதர்ச்செடி உருண்டையை விரட்டிக் கொண்டே .மேலும், கிரீமியாவிலும், நீல நிறமான காகேசிய மலை களின் அடிவாரத்திலும், சிலந்தி வலைகளின் பளிச்சிடும் வெண் ணிற் இழைகள், தெளிவான குளிர்ந்த காற்றில் இன்னும் மிதந்தாடிக் கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் இரவும் பகலும் போர் முழக்கம் ஒலித்துக் கொண்டிருந்த~~அந்த இடத்தி விருந்த பதுங்கு குழிகள் மற்றும் குண்டு விழுந்து குழிந்த பள்ளங்கள் ஆகியவற்றின் விளிம்போரங்களைச் சுற்றிலும் , தெத்தும் குத்துமான களைச்செடிகள் மண்டி வளர்ந்துள்ளன? அந்தச் செடிகளின் மீது வெள்ளிநிறமா ன சிலந்தி வலைகள் படர்ந்துள்ளன ; அந்தச் சிலந்தி வலையின் இழைகள், தம்மீது முத்து முத்தாகப் படிந்து திரண்டிருந்த பனியின் சிறு கண்ணீர்த் துளி க ளின் பாரத்தைத் தாங்க மாட்டாமல் தொய்ந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றன, மேலும் எங்கணும், ஸ்டாலின் கிராடிலிருந்து பெர்லின் . வரையிலும், காகசஸிலிருந்து பாரென்ட்ஸ் கடல் வரையிலும்.-- என் நண்பரே , உங்கள் பார்வை எங்கெங்கே தங்கிய போதிலும் அங்கெல்லாம்-போரில் இறந்துபட்ட போர்வீரர்களின் கல்லறைகளையே, நமது தாயகத்தின் இதயத்துக்கு மிகவும் அருமைவாய்ந்த கல்லறைகளையே நீங்கள் காண்பீர்கள். மேலும், அந்தக் கணத்தில் நீங்கள் நமது சொந்த சோவியத் ஆட்சியைப் பாதுகாப்பதில் உங்கள் நாட்டுக்கு ஏற்பட்ட எண்ணிறந்த இழப்புக்களை மனவேதனையோடு நினைவு கூர்வீர்கள்; உங்கள் நினைவில் நமது தாயகத்தின் விடுதலைக்கும் சுதந்திரத்துக்குமான போரில் வீழ்ந்துபட்ட வீரர்களின் கீர்த்தி நிரந்தரமாக வாழ்க என்ற வாசகங்கள் புனிதத் தன்மைமிக்க இரங்கற் பாவைப்போல் ஒலிக்கும். கடந்த காலத்தை நினைவு கூர்ந்து பார்க்கும்போது, நீங்களே இவ்வாறு சிந்திப்பதைக் கண்டுணர்வீர்கள்; இந்தப் போரினால் எவ்வளவு பேர் அனாதைகளாகி விட்டனர்! துக்ககர {யான நினைவுகளுக்கு நேரமும் வாய்ப்பும் நிறையவுள்ள இந்த நெடிய மாரிக்கால இரவில், போரினால் விதவையாக்கப்பட்ட மாதர்கள் எத்தனை பேர், தமது தனிமையில், முதுமை தட்டிய தமது முகத்தைக் கைகளால் அழுத்தி - மூடிக்கொண்டு, காஞ்சிரங்காயைப்போல் கசப்பான கண்ணீர்த் துளிகள் தமது கைவிரல்களைச் சுட்டெரிக்க, இருட்டில் கலங்கி அழுதுகொண்டிருப்

பார்கள். தமது சோஷலிசத் தாயகத்துக்கான போரில் மாண்டு :

139