பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட தந்தையின் மரணத்தால், என் றுமே ஆருத வகையில் காயம்பட்டுவிட்ட எத்தனை குழந்தைகளின் இதயங்கள், படுக்கப் போகும் நேரத்தில் சந்தர்ப்பவசமாக நேர்ந்த பழைய நினைவின் காரணமாக, குழந்தைத் தன்மையற்ற கொடிய வேதனையால் சாம் பிச் சுருங்கும், அல்லது அது இவ்வாறும் நிகழலாம்; பல ஆண்டுகளாக ஒரு சோகமயமான அமைதி நிலவி வந்துள்ள ஓர் அறைக்குள் ஒரு வயோதிகர், இறந்துபோன தனது மகன்களை எண்ணிக் கண்ணீர் சிந்தாமல் அழுது கொண்டிருக்கும் தமது நரைத்த தலை கொண்ட மனைவியின் அருகே நெருங்கிச் சென்று, மக்களை இழந்த மாளாத பெருஞ்சோகத்தால், தனது கண்ணீரை யெல்லாம் கசக்கிப் பிழிந்து கொட்டிவிட்ட அந்தத் தாயின் ஒளியிழந்த கண்களை உற்று நோக்குவார். பிறகு அவர் உள்ளடங்கிய, நடுங்கும் குரலில் இவ்வாறு கூறுவார்: “'வா வா. எழுந்து வா, வருத்தப்பட்டுக் கொண்டேயிருந்தால் எப்படி?.. தயவு செய்து அழாதே, ' கண்ணே ...மக்களை இழந்தவர்கள் தாம் மட்டும்தானா?...** பிறகு அ வ ர் பதிலுக்குக்கூடக் காத்திராமல், ஜன்னல் பக்கமாக நடந்து செல் வார்; ஒரு சிறு வெறண்ட விம்மலோடு எழுந்து வரும் தமது கண்ணீரை விழுங்கித் தீர்ப்பதற்காகத் தொண்டையைச் செருமிக் கொள்வார்; பிறகு எதையும் காணாது நிலைகுத்திப்போன கண்களோடு பனி மூட்டம் படிந்த ஜன்னலையே வெறித்து நோக்கியவாறு, நெடுநேரம் அங்கேயே நின்று கொண்டிருப்பார்......... நண்பரே, நினைத்துப் பாருங்கள், சோவியத் ஆட்சியின் முப்பது ஆண்டுக் காலத்திலும், ஏற்பட்ட சிரமங்கள் எவ்வளவு தான் பெரியவையாக இருந்த போதிலும் கூட, சோவியத் யூனியன் போரிலாகட்டும், அல்லது தான் மேற்கொண்ட எந்த வொரு பொறுப்பிலாகட்டும், என்றுமே தோல்வி கண்டதில்லை என்பதை நினைத்துப் பாருங்கள். இறுதியில் அது வெற்றியே அடைந்தது. போர்களில் மிகமிகப் பெரியதா என இந்தப் போர் நமக்கு ஏராளமான துன்பங்களையும் எண்ணிறந்த இழப்புக்களை பும் ஏற்படுத்தியுள்ளது. என்றாலும், நமது நாட்டின் சுதந்திர பீடத்தின்மீது கொடுக்கப்பட்ட இந்தப் பலிகள் நமது பலத்தைக் குனறத்து விடவில்லை; அதேபோல் உயிரிழப்பினால் ஏற்படும் மனக்கசப்பு நமது உணர்வைக் குன்றச் செய்து விடவில்லை, சமயங்களில் இவ்வாறு நேர்வதுண்டு. அதாவது ஸ்டெப்பி வெளியில் காஞ்சிரைச் செடிகள் அமோகமா க முளைத்து வளர்ந்து, கோதுமை வயல்களை அடுத்துள்ள செழிப்பான புல் வெளிகளின்மீதும் நீல நிற மூட்டம் போல் படர்ந்து 1.ரவி விடுவ

துண்டு. இதனால் கோதுமைத் தானி பேக் கதிர்கள் முற்றிவரும்

140