பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீதத்தைச் சீட்டியடித்து இசைத்துக் கொண்டு மௌனமாகக் குதிரைகளை ஓட்டிச் சென்றார். அவர் விஷயத்தில் எனது பார்வை யில் பட்டதெல்லாம் உடம்போடு இறுகி ஒட்டிக்கிடந்த ஆட்டுத் தோல் கோட்டுடன் கூடிய அவரது பரந்த முதுகு, அவரது சுருக்கங்கள் விழுந்த பழுப்பு நிறமான கழுத்தின் பின்பகுதி, மானாங்காணியான ஏதோ ஒரு கோணத்தில் அவர் அணிந்திருந்த கம்பளித் தொப்பிக்குக் கீழாக, உறைபனி படிந்து வெள்ளை நிறமாகத் தோற்றிய அவரது தலைமுடி ஆகியவைதாம். ஆனால் நான் அவரிடம் ஏதோ கேட்டவுடனேயே, அவர் சட்டென்று என்னைப் பார்க்கத் திரும்பி, கடிவாளங்களைத் தமது ஆசனத்தின் கீழ் சொருகி வைத்து விட்டு, புன்னகையோடு எனக்கு உடனே பதிலளிக்கத் தொடங்கி விட்டார்: எங்கள் பண்ணை வீடுகளில் இப்போது என்ன நடந்து வரு கிறது என்பதை நீங்கள் கண்ணால் பார்க்க வேண்டும். கடவுள் தான் இதிலிருந்து, எங்களைத் தடுத்துக் காப்பாற்ற வேண்டும்... . "ஏன்? என்ன நடந்து கொண்டிருக்கிறது?' என்று கேட்டேன் நான். "' "ஏனா? கூட்டுப் பண்ணைகள் தொடங்கப்பட்டு வருகின்றன; எனவே கிராம மக்கள் எப்போது பார்த்தாலும், கூட்டம் கூட்டம் என்று கூட்டத்திலேயே உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். மாஸ்கோவில் கூட அவர்கள் இப்படி உட்காருவதில்லை என்றே நான் கருதுகிறேன்! இப்படி என்றால் எப்படி?” - ஏனா? அவர்கள் இரவும் பகலும், மூன்று நாட்களாகத் தொடர்ந்து ஒரே மூச்சில் இப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள்!” "உங்கள் ஊரில் பல பேர் கூட்டுப் பண்ணையில் சேர்ந்திருக் கிறர்களா? அவர்கள் இரண்டு கோஷ்டிகளாகப் பிரிந்திருக்கிறார்கள். உபாதிப்பேர் சேர்ந்துள்ள னர் ; மற்றவர்கள் இதைப்பற்றி இன்னும் - முடிவு , செய்ய முடியாத இரண்டுங்கெட்டான் மனத்தோடு, வீட்டு முற்ற வாசல் களின் முன்னால் ஆட்டு மந்தைபோல் கூடி யிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கூட்டங்களில் கூடியமர்ந் திருக்கின்றனர்; அங்கு இளஞ்சேவற் கோழிகளைப் போல் அவர் கள் சண்டை பிடிக்கவும் தொடங்கி விடுகின்றனர். உண்மை யைச் சொன்னால், இதையெல்லாம் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. என் அண்டை வீட்டுக்காரரான மிக்கி ' ஃபோமிச் அந்திமப் பருவத்தை எட்டிவிட்ட வயோதிகர், கிழடுகள் விஷயத்

தில் வழக்கமாக ஏற்படும் மலஜல , உபாதைகள் . கடுமையா.கி

145