பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசமானது, அது படுமோசமானது என்று ஏதேதோ முனகிக் கொண்டேயிருந்தார்...... பிறகு அவர் எஃப்ரோசின்யாவைத் தமது முழங்கையினால் லேசாக இடித்து, அமைதியாக இவ்வாறு கூறினார்: “முதலில் அவர்கள் பசு மாடுகளையெல்லாம் பொதுச் சொத்து ஆக்குவார்கள்; பிறகு பெண்களான உங்களையெல்லாம் ஆண்களோடு படுத்துக் கிடப்பதற்காக, ஒரு பொதுவான படுக்கைக்கே விரட்டியடித்துக் கொண்டு செல்வார்கள். விஷயம் தெரிந்த யாரோ ஒருவரிடமிருந்து தான் நான் இதனைக் கேள்விப் பட்டேன்.' கேலி பேசுவதில் கெட்டிக்காரியான அவளும் இவ்வாறு சட்டென்று பதில் கூறினாள்; 'நல்லதாய்ப் போயிற்று. நானோ ஒரு ஏழை விதவை; நான் இழக்கப் போவது ஏதும் இல்லை. என்றாலும், நான் உமது பக்கத்தில் படுத்துக் கிடக்கும் கதி நேராமல், கடவுள் என்னைக் காப்பாற்றட்டும்! அப்படி நேர்ந்தால், பிறகு நான் கூட்டுப் பண்ணையிலிருந்து விலகிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும்,' நல்லது. இந்தப் பதில் ஃபோமிச் சுக்குப் பிடிக்கவில்லை, எனவே அவர் உரத்த குரலில் இவ்வாறு கேட்டார்: 'நீ என்னைப்பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறாய், வெட்கங்கெட்ட சிறுக்கியே?” இதைக் கேட்டதும் எஃப்ரோசின்யாவுக்கு உண்மையிலேயே ஆத்திரம் வந்து விட்டது; அவள் எல்லோரது காதிலும் விழும் வண்ணம் உரத்த குரலில் இவ்வாறு கத்தினாள்: 'ஒரு மைலுக்கு அப்பாலும் தாற்றமடிக்கும் பழைய தானியக் குதிரின் எலிப் புழுக்கைகளைப் போலத்தான் நீர் நாறுகிறீர் என்றுதான் சொன்னேன்?' இதன் பின் வார்த்தைக்கு வார்த்தை தடித்தது; இருவரும் ஒருவரை யொருவர் ஏதேதோ வசைபாடிச் சண்டை பிடித்துக் கொண் டனர். அவர் அவ ளை வெட்கங்கெட்டவள், விவஸ்தை கெட்ட வள், பாவி என்று ஏதேதோ கூறித் திட்டினார்; அவளும் அவர் இரண்டு ஜோடி எருதுகளும் ஒரு ஜோடி கு திரைக ளும் கொண்ட ஒரு குட்டிக் குலாக்காக இருப்பதால், அவர் இயல்பாகவே கூட்டுப் பண்ணைக்கு எதிராகச் செல்வதாகவும், அவளிடம் இருந்ததெல்லாம் ஒரே ஒரு பாழாய்ப்போன பசுமாடு மட்டும் தான் என்றும் அவரிடம் கூறினாள். அவர் அவளை ஏதோ ஆபாசமான வார்த்தையைக் கூறித் திட்டினார்; அவளும் தன்னால் முடிந்த மட்டிலும் பதிலுக்குப் பதில் கூறித் திட்டித் தீர்த்தாள். பிறகு அவர்களுக்குள் கை கலப்பே தொடங்கி விட்டது. பழைய ஆட்சிக் காலத்தில் நடந்ததைப் போல், ஃபோமிச் அவளது தலை மீது கிடந்த சால்லையை இழுத்தெறிந்து விட்டு, அவளது தலை மயிரைப் பற்றிப் பிடித்தார், எஃப்ரோசின்யா-அவளும் முட்டா

ளல்ல-அவளும் அவரது தாடியைப் பற்றி பிடித்தாள்'; மேலும்

147