பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் இளமையும் பலமும் மிக்க பெண்ணாக இருந்ததால், அந்தத் "தாடியை ஒரு வெட்டு வெட்டி இழுத்துக் கையோடு ஒரு கொத்து மயிரையும் பிடுங்கி விட்டாள். உண்மையில் அவர்கள் இருவரையும் கை கலப்பிலிருந்து விலக்கி விடுவதே பெரும் - பாடாய்ப் போய் விட்டது. நான் ஃபோமிச்சைப் பார்த்தேன்; அவரது தாடியில் பாதி சுத்தமாகப் பறிபோய் விட்டது! நான் சிரிப்பை அடக்கி வைக்க , முயன்றவாறு அவரிடம் இவ்வாறு சொன்னேன்: ' மிக்கி ஃடே.சாமிச், இனிமேல் இந்த மாதிரிக் கூட்டங்களுக்கெல்லாம் வராதீர்கள். இல்லாவிட்டால், பெண்கள் உங்களைக் கோழிக் குஞ்சின் தூவலைப் பிடுங்குவதுபோல் பிடுங்கிப் போட்டு விடுவார்கள், அப்புறம் அவர்கள். உங்களுக்கு மருந்துக்குக்கூட ஒரு மயிரையும் கூட விட்டு வைக்க மாட் "டார்கள். அவர் பெருமைப்படுபவர் போல் என்னை வெறித்துப் பார்த்து விட்டு இவ்வாறு கூறினார்: * என் தலையில் உள்ள எல்லா மxஓரையும் நான் இழந்தாலும் கூட, கூட்டங்களுக்குப் போவதை மட்டும் தான். நிறுத்தமாட்டேன்!', 'அவர் அப்படிப்பட்ட செயல் வீரராகத்தான் மாறி விட்டார். அவர் இப்படி மாறுவார் என்று நான் என்றுமே நினைத்ததில்லை.” "சரி, நீங்கள்- நீங்கள் கூட்டுப் பண்ணையில் சேர்ந்து விட்டீர்களா? என்று நான் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினேன். ' அவர் தமது பழுப்பு நிறத்தாடியை அமைதியாகத் தடவிக் கொடுத்தார்; பிறகு தமது துறுதுறுக்கும் நீல நிறக் கண்களைக் குறும்புத்தனமாக ஏறச் சொருகினார். அதற்கொன்றும் அவசரமில்லை என்றார் அவர்: ""கல்யாண - மானாலும் அல்லது வேறு எந்த மகிழ்ச்சிகரமான சந்தர்ப்ப 'மானாலும், பந்திக்கு முந்திப்போய் உட்காருவதில் நான் என்றுமே - அவசரப்படுவதில்லை, - கடைசியாகச் சென்று உட்கார்ந்தால், • நமக்குக் கடை கோடியிலுள்ள இடம்தான் கிடைக்கும், அதனால் அவசியப்பட்டால், நாம் முதலிலேயே எழுந்து வந்து விடலாம். இல்லையா?” ஒருவேளை தமது உருவகமான பேச்சு எனக்கு அவ்வளவு - தெளிவாகப் புரியவில்லை என்று கருதியோ, என்னவோ அவர் மேலும் இவ்வாறு கூறினார்: ஒருவேளை அந்த விருந்தில் போய் உட்கார்வதே எனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். தெய்வ விக்கிரகங்களுக்குக் கீழே போய் நெருக்கி யடித்து உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்தக் கும்பலில் நான்

எதற்காகப் போய் மாட்டிக் கொள்ள வேண்டும்?

148