பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடித்துக் கொண்டிருப்பதை தான் உணர்ந்தேன் ....... என் முன்னால் சுடர்விடும் துடிப்பான கண்களோடு ஒரு கட்டுமஸ்தான பெண், நின்றாள். அவள் முகம் மிகமிக அழகான மலரைப்போல் அத்தனை அழகாக இருந்தது! அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்னால் ஒரு வார்த்தை கூடப் பேசமுடிய வில்லை. 'நான் ஒரு செத்துப்போன மீனைப்போல் ஊமையாக அங்கு நின்றேன். “ நல்லது. அவர்கள் எங்களைத் தனியே ஓர் அறையில் விட்டு விட்டார்கள், நாங்கள் இருவரும் அங்கிருந்த பெட்டிமேல் உட்கார்ந்தோம். அப்போதும் நான் ஒரு வார்த்தை பேசவில்லை; அவளை மேலும் கீழும் பார்த்தவாறு வெறுமனே கண்களை இமை கொட்டியவாறே இருந்தேன். ஒரு விஷயம் என் க வனத்தைக் கவர்ந்தது. அவளது சின்னஞ் சிறிய கைகள் தான் அவை. அவை ஒரு குழந்தையின் கரங்களைப் போல் அத்தனை சிறிதாக இருந்தன. இத்தகைய கைகளைக் கொண்டு, இவளால் ஒரு தொறட்டியைக் கூடத் தூக்க முடியாதே, பண்ணையில் இவ் ளிடமிருந்து எத்தகைய உதவியை எதிர்பார்க்க முடியும் என்று நான் நினைத்ததும் எனக்கு நினைவிருக்கிறது. என் மூளை வேலை செய்தது, ஆனால் என் நாக்கோ வாயின் மேலண்ணத் தோடு ஒட்டிக்கொண்டு விட்டது. நாங்கள் இவ்வாறே நெடு நேரம் இருந்தோம்; இறுதியில் அவள் பொறுமையிழந்து போய் விட்டாள், என் காதருகே மெல்லக் குனிந்து, * நீங்கள் என்ன ஊமையா?' என்று கிசுகிசுத்தாள், நான் தலையை ஆட்டினேன்; எனி னும் மீண்டும் பேச முடியவில்லை. முயன்று பார்த்தேன்; எனினும் பயனில்லை, பின்னர் அவள் முகத்தைச் சுழித்தாள்; என்னைப் பார்த்து இவ்வாறு கடுமையாக சொன் னாள்; 'உங்கள் நாக்கைக் காட்டுங்கள், ஒரு வேளை இங்கு வரும் வழியில் வண்டி தூக்கிப் போட்டதால், நீங்கள் உங்கள் நாக்கைக் கடித்திருக்கலாம். நானும் ஒரு முட்டாளைப் போல் அவள் சொன்னபடி நாக்கை வெளியே நீட்டினேன் ......ஓ! பரிதாபமே! அந்தச் சமயத்தில் நான் எத்தகைய முட்டாளாகக் காட்சியளித்திருப்பேன் என்பதை நினைக்கும் போது நான் இன்றும் கூட வெட்கப்படுகிறேன். அவள் தனது கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வரும் அளவுக்கு அத்தனை பலமாகச் சிரித்தாள், சிரித்ததால் அவளுக்கு மூச்சே திணறி விட்டது; அவள் தனது கைகளை மார்பின் மீது வைத்து அழுத்திக் கொண்டு, தனது திணறல்களுக்கிடையிலும் இவ்வாறு கூச்சலிட்டாள்: “ அம்மா அம்மா:, இங்கு வாயேன்! இவரைப் பாரேன்! ஏனா? இவர்

ஒரு ' . சுத்த் அச்டு! இவரை " நான் எப்படி - மணந்துகொள்ள

150