பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளது கைகளால்தான் நேர்கின்றனர். இப்போதும் அதே நிலை தான்: நான் கூட்டுப் பண்ணையில் சேர்வதற்குப் பயப்படுகிறேன், ஆனால், யாருக்குத் தெரியும்? ஒருவேளை என் சொந்தப் பண்ணையை நான் நிர்வகிப்பதே, என்னைத் தனிமையில் தவிக்கும் ஓநாயைப் போல் ஊளையிட வைத்து விடலாம். தனியார் பண்ணைத் தொழிலையே பற்றிப் பிடித்துக் கொண்டிரு, அதைப்பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால், நீ நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். என்ன, நான் சொல்வது சரிதானே? , தனது தாடிக்குள்ளேயே சிரித்தவாறே, அவர் என்னை நோக்கிக் கண்ணைச் சிமிட்டினார்; -- தமது குறும்புத்தன பார்வையோடு தமது கண்களை ஏறச் சொருகினார். பார்வைக்குத் தோற்றிய மாதிரி, அவர் ஒன்றும் அத்தனை சாதாரணமான, அப்பாவியான நபர் அல்ல என்பதையும், அவர் என்னிடம் கூறிய எல்லாவற்றையும், நான் விரும்பிய வண்ணமே-அதாவது வெறும் வேடிக்கையாகவோ, அல்லது மனப்பூர்வமாகவோ- நான் எடுத்துக் கொள்ளும் பொறுப்பை, அவர் என்னிடமே விட்டுவிட்டார் என்பதையும் அந்தக் குறும்புப் பார்வை எனக்கு உணர்த்தியது . அவர் பல நிமிட நேரம் மௌனமாக இருந்தார்; பிறகு எந்தவிதமான விளையாட்டுத் தோரணையும் இல்லாத வருத்தம் தோய்ந்த தொனியில் இவ்வாறு கூறினார்: “என்ன செய்ய வேண்டும் என்பதை நான் எப்படித் தெரிந்து தொலைப்பது? ... நல்லது. நாம் வாழத்தான் போகிறோம்; வாழ்ந்து எல்லா வற்றையும் பார்ப்போம், , திடீரென்று அவர் தமது ஆசனத்திலிருந்து துள்ளியெழுந்து, வண் டிக் குதிரைகளை எதிர்பாராத மூர்க்க வெறியோடு சவுக்கால் அடித்தார்; அத்துடன் அவற்றை நோக்கி இவ்வாறு கத்தவும் செய்தார்: ஏ, பாழாய்ப் போன தனிப்பட்ட விவசாயிகளே! இவ்வளவு நேரம் நீங்கள், ஒட்டுக் கேட்டுக் கொண்டுதானே இருந்தீர்கள். இல்லையா? இனி உங்கள் வால்களை எப்படிச் சுழற்ற வேண்டும் என்பதை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன், பாருங்கள்." அற்ப சொற்பமான பனித்துகள்களாக இறங்கிக் கொண் டிருந்த, வெண்பனி, விரைவிலேயே கனத்து விழத் தொடங்கியது: காற்றும் பனிப்படிவங்களை ரோட்டின் மீது வாரிக் கொட்டிய வாறே, மேலும் மூர்க்கமாக வீசிற்று; தமது தொடைப் பிட்டி

களில் சுருள் சுருளாகப் படிந்திருந்த உறைபனியோடு களைத்துப்

154