பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போயிருந்த குதிரைகள், தமது கனத்த துள்ளல் நடையை விடுத்து, வெறுமனே நடந்து செல்லத் தொடங்கின. ' நாங்கள் நிஜ்னியாப்லோன்ஸ்தோயிக் கிராமத்துக்குப் போய்ச் சேரும்போது நள்ளிரவாகி விட்டது. அங்கிருந்த குடிசைகள் ஒன்றின் மூடப்படாத, பனிக்கட்டித் துகள்கள் படித்த ஜன்னல் களின் வழியே தெரிந்த ஒரே ஒரு மங்கிய விளக்கொளியைத் தவிர, மற்றப்படி அந்தப் பெரிய கிராமம் முழுவதுமே இருளில் மூழ்கியிருந்தது. . நாங்கள் அந்த குடிசைக்குச் சென்று, இரவில் அங்குத் தங்கிச் - செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டோம். நான் உள்ளே சென்றேன்; புரோக்கோ ஃபியேவிச் குதிரைகளை வண்டியிலிருந்து அவிழ்த்துவிட்டுக் கொண்டிருந்தார். உள்ளே படுக்கைக்கு அருகே கிடந்த தணிவான, ஒரு பக்கம் சாய்ந்த பெஞ்சின் மீது, கந்தைத் துணிகள் குவிந்து கிடந்தன; அதன் மீது ஒரு கிழவர் அகல விரித்து வைத்த கால்களோடும், சோர்வோடு குனிந்த முதுகோடும் அமர்ந்திருந்தார். அவரது காலடியில் ஒரு சிறு கறுப்பு ஆட்டுக்குட்டி, பரப்பப்பட்ட வைக்கோல் படுக்கையின் மீது சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த மெழுகுவத்தி விளக்கின் மங்கிய ஒளியில், அதன் சுருள் சுருளான் ரோமம் லேசாகப் பளபளத்தது. அந்தக் கிழவர் எனது வணக்கத்துக்கு வேண்டா வெறுப்பாகப் பதில் வணக்கம் தெரி வித்தார்; பின்னர் என்னை சர்வசாதாரணமாகப் பார்த்து விட்டுத் தமது தலையை மீண்டும் தொங்கவிட்டுக் கொண்டார். அவரது பெரிய, சொரசொரப்பானக் கரம், அந்த ஆட்டுக் குட்டியை மெதுவாகவும் அன்போடும். தடவிக் கொடுத்தது; அவரது தடித்த விரல்கள் அதன் பளபளக்கும் சுருள் சுருளான ரோமத்தை மிகவும் லேசாகவே தொட்டன. - அந்தக் கிழவி-அவள் அவரது மனைவியாகத்தான் இருக்க வேண்டும்-கணப்புப் படுக்கையிலிருந்தவாறே பேசினாள்: " நீங்கள் போய் குதிரைகளை எங்குக் கட்டுவது என்பதை அவருக்குக் காட்டுங்கள். அந்தக் கிழவர் தமது ஆட்டுத்தோல் கோட்டைத் தோளின் மீது தொங்க விட்டவாறே, எதுவும் பேசாமல் வெளியே சென்றார். : 16 நீங்கள் எப்போதுமே இவ்வளவு நேரம் கழித்துத்தான். படுக்கச் செல்வீர்களா, அல்லது உங்கள் பண்ணையில் ஏதாவது கோளாறு நேர்ந்து விட்டதா?” என்று நான் அந்த மூதாட்டி

யிடம் கேட்டேன்,

155